சூப்பர் ஸ்டாருக்கு கவர்னர் பதவியா?

Filed under: அரசியல்,சினிமா |

பாஜக தரப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கவர்னர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை நேற்றுக் கொண்டாடினார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

சமீபத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் பலதரப்பிலிருந்தும் எழுந்தன. எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மாநிலங்களை நியமன எம்பியாக இளையராஜா நியமிக்கப்பட்டார். அதேபோல் ரஜினியும் வட மாநிலத்தில் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு ரஜினியை நியமிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ரஜினி ஆளுனர் பொறுப்பு ஏற்பட்டால் அவரால் சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் இத்தகவல் வதந்தியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.