
சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் சேர்ந்து நடித்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை சமந்தாவிற்காக பார்த்தவர்கள் தான் ஏராளம். இதைதொடர்ந்து அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இப்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக நாகார்ஜுனாவுக்கு பதிலாக சில எபிசோட்களில் சமந்தா பங்குபெற்றார் என்பது […]
Continue reading …
“விக்ரம்” திரைப்படம் இன்று வெளியாகி நான்கு காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட உள்ளது. இத்திரைப்படம் வெற்றி என்பது உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், “உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமல் சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயண்ட் […]
Continue reading …
இயக்குனர் அட்லி நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அத்திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளாக வசித்து […]
Continue reading …
இயக்குனர் மிஷ்கின் “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனரது அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் “மண்டேலா” திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். “டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே நடித்து முடித்துள்ள “அயலான்” படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியாகி […]
Continue reading …
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து ரஜினிகாந்தை சற்றுமுன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாக உள்ளது. நாசர், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விவாதிப்பதாக கூறப்படுகிறது.
Continue reading …
அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவி உள்ளது. சூப்பர் ஸ்டாரை தினமும் பலரும் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுபற்றி அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது, “அஜித் மற்றும் -ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகவல் பொய்யானது. இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது” என்று தெரிவித்தார்.
Continue reading …
திரைப்படத்தில் சர்ச்சை மிகுந்த காட்சிகள் இருப்பதால் நடிகர் விஜய் நடித்து வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட தடை விதித்தது. தற்போது மேலும் ஒரு இந்தியப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் “சாம்ராட் பிரித்விராஜ்” என்ற திரைப்படத்திற்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளன. இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Continue reading …
தற்போது தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் விஷயம் நயனுக்கும், விக்கிக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்தைத்தான். இன்றைய நிலையில் ஹாட் டாப்பிக்கே அதுதான். அவர்களது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இணையதளம் ஒன்றில் நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. இத்திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி […]
Continue reading …
துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை மணமுடிக்க உள்ளார் நடிகை பூர்ணா. நடிகை பூர்ணா தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அவரது சமூக வலைதளத்தில் வருங்கால மாப்பிளையுடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டள்ளார். ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். சற்றுமுன் நடிகை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பூர்ணாவின் வருங்கால மாப்பிள்ளையின் பெயர் சானித் […]
Continue reading …
இயக்குநர் பாலாவுடன் இணைந்து நடிகர் சூர்யா நடித்து வரும் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அப்படத்தை தயாரிக்கவும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை சூர்யா […]
Continue reading …