அட்லி – ஷாரூக்கான் கூட்டணி!

Filed under: சினிமா |

இயக்குனர் அட்லி நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அத்திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. “ஜவான்” என்று படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள டீசர் மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.