
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம், இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் […]
Continue reading …
நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசானம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார், அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.
Continue reading …
சென்னை, அக் 1: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் doodle வெளியிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 1952ம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன், இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படமாகும். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன், […]
Continue reading …
சென்னை, செப் 30: நில மோசடி வழக்கு விசாரணைக்கு, டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராகக்கோரி, நடிகர் வடிவேலுவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில், இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி […]
Continue reading …
சென்னை, செப் 29: கமலின் விக்ரம் படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிட, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில், விஜயசேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படம் மிகப்பெரிய கதைக்களத்தில் உருவாகி வருவதால், ஒரே பாகமாக […]
Continue reading …
லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்து தெரிவுத்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டரில், “சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
Continue reading …
சென்னை, செப் 28: பிரபல நடிகை சாய் பல்லவி, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வுக்கு, தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பல சினிமா துறையினர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை சாய் பல்லவி […]
Continue reading …
சென்னை, செப் 27: நடிகர் சூர்யாவின், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட […]
Continue reading …
சென்னை, செப் 25: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் திரைத்துறையில், பாடும் நிலா என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டவராக, அவர்களின் அன்பு மழையில் நனைந்து வந்தார். 1966ல் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான எஸ்.பி.பி, முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. பின், 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி […]
Continue reading …
லண்டன், செப் 24: ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகரான டேனியல் க்ரெய்க், இங்கிலாந்து கடற்படையில், கவுரவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகத்தில், பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் டேனிடல் க்ரெய்க். கடந்த 2006ம் ஆண்டு முதல், இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் டேனியல் க்ரெய்க் இதுவரை கெசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அளவுக்கு இவரின் நடிப்பு இருக்கும் என்பதால், இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் […]
Continue reading …