வில்லங்கமான கதைகளை, விசித்திரமாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின், தற்போது கொரோனா ஊரடங்கில், 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம். விஷாலை வைத்து இயக்கிய, துப்பறிவாளன் – 2 படம் கைநழுவிப் போன நிலையில், தற்போது, சிம்புவை வைத்து படம் இயக்கும் முடிவில் மிஷ்கின் இறங்கியுள்ளார். அருண் விஜய்யும் கதை ஓகே சொன்னதாக சொல்லியிருக்கிறார், மிஷ்கின்.
Continue reading …வண்டலூர் பூங்காவில் சுமார் 2,700 விலங்குகள் உள்ளன. இப்பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக ‘விலங்குதத்தெடுப்பு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ‘அனு’ என்னும் வெள்ளைப் புலியை மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்து எடுத்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் இப்புலியை தொடர்ந்து தத்தெடுத்து வருகிறார். இப் பூங்காவில் ‘அனு’ புலியுடன் சேர்த்து மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன.
Continue reading …ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்து, பின்னாளில் காணாமல் போன எத்தனையோ நடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் 74 பிளாப் படங்களை கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த். தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப் போனால், உலகளவிலும் பிரபலமடைந்தவர் தான் ரஜினி. ரஜினி படம் என்ற காரணத்திற்காகவே ரூ.100 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற […]
Continue reading …அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. முக்கியமான ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி படம் தீபாவளிக்கு வெளியாகாது எனத் தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் […]
Continue reading …பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ஜெர்ரி ஸ்டில்லர், ஹாலிவுட்டில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர் மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர். நாஸ்டி கேப்பிட்டல், லவ்வர்ஸ் அண் தி அதர் ஸ்டேரஞ்சர்ஸ், மை 5 வைவ்ஸ், ஏர்போர்ட் 1975 போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இதுபோக தி குட் வைப் , மெர்ஸி உள்ளிட்ட வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். சில நாட்களாகவே ஸ்டில்லர், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்தார். […]
Continue reading …மும்பை, மே 13 கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை நிமித்தமாக, தங்களது சொந்த ஊரை விட்டு வந்த பல தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தனர். மும்பையில் அப்படி வந்து தவித்த சுமார் 350 வெளிமாநிலத் தொழிலாளர்களை, வில்லன் நடிகர் சோனு சூட் 10 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அப்போது அவர் […]
Continue reading …சென்னை, மே 13 தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்சி, அதன்பின் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்தார். தற்போது நடிகை டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சனுடன் டாப்ஸி நடித்த ’பிங்க்’ திரைப்படம் தான் தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற படமாக ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை […]
Continue reading …சென்னை,மே 12 கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி […]
Continue reading …சென்னை,மே 8 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய post production பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார் […]
Continue reading …பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர், வயது 67 இன்று காலை காலமானார். இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் […]
Continue reading …