பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..

Filed under: சினிமா |

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ஜெர்ரி ஸ்டில்லர், ஹாலிவுட்டில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர் மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர். நாஸ்டி கேப்பிட்டல், லவ்வர்ஸ் அண் தி அதர் ஸ்டேரஞ்சர்ஸ், மை 5 வைவ்ஸ், ஏர்போர்ட் 1975 போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இதுபோக தி குட் வைப் , மெர்ஸி உள்ளிட்ட வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

சில நாட்களாகவே ஸ்டில்லர், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்தார். இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 92. இவரது மனைவி அன்னி மியாரா சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு பென் ஸ்டில்லர் என்ற மகனும், எமி ஸ்டில்லர் என்ற மகளும் உள்ளனர்.

பென் ஸ்டில்லரும் அப்பாவைப்போல நிறைய நகைச்சுவை படங்களில் நடித்து வருகிறார். அப்பா இறந்ததை பற்றி பென் ஸ்டில்லர் கூறியதாவது, வாழும் வரை எனது தாயாருக்கு சிறந்த கணவராகவும், எங்களுக்கு சிறந்த தகப்பனாகவும் இருந்தார் என்று கூறியுள்ளார். மேலும் ஜெர்ரி ஸ்டில்லர் மறைவுக்கு , ஹாலிவுட் நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்