ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜாராணி 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் உதவியார் அட்லீ டைரக்ட் செய்த படம். ராஜாராணி படம் 25 நாளில் 50 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படத்தின் மக்கள் தொடர்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜாராணி வெளியாகி 25வது நாள்வரையில் 50 கோடி வசூலித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் இது மூன்றாவது இடமாகும். தொடர்ந்து பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. […]
Continue reading …அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து விட்டது. இந்த நிலையில் அஜீத்தின் ஆரம்பம் தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வருகிற 31ந் தேதி ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள். “ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க” […]
Continue reading …சிம்புவை போல் யாருமில்லை என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் சிம்பு, தனுஷ் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. சிம்புவுக்கும், தனுஷுக்கும் இடையில் இருப்பது வெறும் தொழில் முறை நட்பா? இல்லை நெருங்கிய நட்பா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு தனுஷ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். என்னையும், சிம்புவையும் பத்திப் பேசும்போது எதிரி என்பது போன்று சிலர் வெளிப்படையாவே பேசினாங்க, நாங்கள் யதார்த்தமா பேசினாலும் சர்ச்சை […]
Continue reading …இயக்குனர் அட்லி தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி ‘ திரை படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே நிருபனம் செய்து உள்ளார். இந்த அறிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குனருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த இளம் இயக்குனர் அவர் மீது உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்து உள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலா ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற […]
Continue reading …விஷால் முதல்முதலாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் பாண்டியநாடு. கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுசீந்திரன். இந்தப்படத்தில் இசையில் சூப்பராக மிரட்டி, அத்தனை பாடல்களையும் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் டி.இமான். சத்யம் தியேட்டரில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் இமானுக்கு புகழாரம் சூட்டினர். கதாநாயகி லட்சுமிமேனன் இதில் எனக்கு புதுமையான பாத்திரம் தந்து மெருகேற்றியிருக்கிறார், சுசீந்திரன்” என்றார்.
Continue reading …திரை உலகில் பொதுவாக போலீஸ் அதிகாரியாக பெரும்பாலான படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உண்டாகி விடும் . அதை போலவே தன்னுடைய 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்து வருபவர் ஜெயம் ரவி. (தாஸ் படத்தில் கால் பந்தாட்ட வீரராக , குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்தில் குத்து சண்டை வீரனாக , பேராண்மை படத்தில் என் சி. சி. பயிற்சியாளராக , தற்போது முடியும் தருவாயில் உள்ள பூலோகத்தில் […]
Continue reading …ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி – கூறுகிறார் தயாரிப்பாளர் நடிகர் v t v கணேஷ். ‘விண்ணை தாண்டி வருவாயா ‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டு பரபரப்பாக பிரபலமானவர் கணேஷ் .அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’ படம் வரை தொடர்ந்து , சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது . இந்த […]
Continue reading …நியுமராலஜிப்படி தன் பெயரை அனுஷா என மாற்றிக்கொண்டாராம் சுனைனா. காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுனைனா. பின்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் அமையாவிட்டாலும் சமீபத்தில் வெளியான சமர், நீர்பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார். சுனைனாவாக வலம் வந்த இவர் தற்போது அனுஷாவாக மாறியுள்ளாராம். காரணம் கேட்டால், நான் பிறந்தபோது எனக்கு குறிப்பிட்ட ஒரு எழுத்தில் முடியும்படி பெயர் வைக்குமாறு ஒரு பண்டிட் கூறினாராம். அதனால் எனக்கு சுனைனா என பெயர் வைத்தார்கள். இப்போது […]
Continue reading …உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன். விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது […]
Continue reading …“காதல் திருமணந்தான் ஒர்க் அவுட் ஆகும்னு நெனக்கிறேன். ஆனாலும் நான் காதல் வலையில் இன்னும் சிக்கவில்லை. ‘ராஜாராணி’ படம் எனக்கு நல்ல பெயரைத் தந்திருக்கிறது. அந்த பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கணும். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவுடன் நடிக்கிறேன். ஒரு இஸ்லாமியரும் இந்துவும் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட படம். ‘பம்பாய்’ படத்திலிருந்து இந்தக்கதை முற்றிலும் மாறுபட்டது…” என்றார், ஜெய்.
Continue reading …