Home » Archives by category » சினிமா (Page 33)

பைட்டர் படத்திற்கு நோட்டீஸ்!

Comments Off on பைட்டர் படத்திற்கு நோட்டீஸ்!

“பைட்டர்” திரைப்படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்டதால் விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஹிருத்திக் ரோசன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த படம் “பைட்டர்.” இத்திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்டதால் இப்படத்திற்கு விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “பைட்டர்” இந்திப் படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், விமானப்படையை அவமதித்துவிட்டதாகக் கூறி, இதற்கு விளக்கம் கேட்டு, அசாமை சேர்ந்த விமானப்படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். […]

Continue reading …

விஜய்க்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்!

Comments Off on விஜய்க்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்!

நடிகர் விஜய்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சிக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமாத் துறையினரும் […]

Continue reading …

சொந்த வீட்டிலிருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா!

Comments Off on சொந்த வீட்டிலிருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர். இவர் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக “தமிழன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது உயிருக்கு பயந்து ரூ.160 கோடி மதிப்புள்ள வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர், பாலிவுட் சினிமாவில் கிரிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஹாலிவுட் மற்றும் வெப் சிரீஸ் […]

Continue reading …

நடிகர் விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ் “நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரினை நடிகர் விஜய் நேற்று அறிவித்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, “விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு […]

Continue reading …

நடிகர் ஜீவாவின் மியூசிக் லேபிள் வெளியீடு!

Comments Off on நடிகர் ஜீவாவின் மியூசிக் லேபிள் வெளியீடு!

நடிகர் ஜீவா இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் ஜீவா, அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, […]

Continue reading …

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசும் ஜெயகுமார்!

Comments Off on விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசும் ஜெயகுமார்!

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து, “அரசியல் என்பது பெருங்கடல்: விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா?” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சற்றுமுன் தனது அரசியல் கட்சி பெயரை வெளியிட்டார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் உதயநிதி அல்லது விஜய் மற்றும் அண்ணாமலை என தமிழக அரசியல் இருக்கும் […]

Continue reading …

#தமிழகவெற்றிகழகம் இந்தியளவில் டிரெண்டிங்!

Comments Off on #தமிழகவெற்றிகழகம் இந்தியளவில் டிரெண்டிங்!

இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு பரபரப்புகள், விவாதங்கள் நடந்து வந்த சூழலில் இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்தே விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய் 3 பக்கத்திற்கு நீளமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். அதில் தனது நோக்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல […]

Continue reading …

விஜய்யின் கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

Comments Off on விஜய்யின் கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த அறிவிப்பை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமாக அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. கட்சி பெயரை அறிவித்ததை அடுத்து பிரம்மாண்டமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷனரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பதிவு செய்த […]

Continue reading …

ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

Comments Off on ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

“கேம்சேஞ்சர்” திரைப்படத்தை ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இத்திரைப்படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெருமளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் “இந்தியன்” படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். “இந்தியன் 2” இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் […]

Continue reading …

நாகேஷ் குடும்ப மூன்றாவது தலைமுறை நடிகர் ஹீரோவாக அறிமுகம்!

Comments Off on நாகேஷ் குடும்ப மூன்றாவது தலைமுறை நடிகர் ஹீரோவாக அறிமுகம்!

கடந்த 1933 ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள மொழிஞ்சிவாடியில் பிறந்தவர்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நாகேஷ். ஆரம்ப காலத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை செய்து வந்த நாகேஷ், நாடகத்துறையில் மீது உள்ள ஆர்வத்தால் நடிகரானார். அப்போது, பிரபல காமெடியனாக இருந்த சந்திரபாபுக்குப் போட்டியாகவும் அதேசமயம், தனது தனித்தன்மையுடன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திறமைக்கேற்ப பிரபல பட அதிபர்கள் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களில் காமெடியனாக்கினர். 1000 படங்களுக்கு […]

Continue reading …