நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர் வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூரி “விடுதலை 2” மற்றும் “கொட்டுக்காளி” ஆகிய படங்களை முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் “கருடன்” படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் […]
Continue reading …நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். ஆனால் அதன் பின்னர் “36 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய் […]
Continue reading …பன்சாலி மிகப்பிரம்மாண்டமாக அழகியல் தன்மையோடு புராணப் படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய “கங்குபாய் கத்யவாடி” திரைப்படத்துக்காக ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் 1952ம் ஆண்டு வெளியான “பைஜு பாவ்ரா” படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது […]
Continue reading …நடிகர் சூர்யா பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து தயாரிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், சூர்யா ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். அதற்குக் காரணம் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இப்போது “வணங்கான்” படத்தை இயக்குனர் பாலா மற்றும் “மாநாடு” படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் […]
Continue reading …நடிகர் நரேன் நடிப்பில் KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆத்மா.” படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் […]
Continue reading …கடந்த சில நாட்களுக்கு முன் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் […]
Continue reading …நடிகர் விஜய், சினிமாவில் நடிப்பதுடன் மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில், தமிழகம் முழுவதும் விஜய் நூலகம், விஜய் பயிலகம், விஜய் இலவச சட்ட மையம் ஆகியவற்றை அமைத்து வருகிறார். அரசியலில் விஜய் நுழைவதற்கு ஆன முதல்கட்டமாக தன் மக்கள் இயக்க மாணவரணி, மகளிரணி, இளைஞரணி, ஐடி அணி ஆகியோரை தனித்தனியே அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். கடந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தது, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவி அளித்தது மக்களிடையே அதிகம் பேசப்பட்டது. விஜய் […]
Continue reading …ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது. அந்த படம் கிட்டத்தட்ட டிராப் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் “தக்லைப்,” அன்பறிவி இயக்கும் “கமல் 237” திரைப்படம் மற்றும் சிம்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களை குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் ஹெச். வினோத்தின் திரைப்படம் குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் கமல்ஹாசனின் […]
Continue reading …இந்த வாரத்தில் மட்டும் தமிழ் சினிமாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “புளூ ஸ்டார்.” இப்படத்தை இயக்குனர் எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன் மற்றும் நீலம் புரடக்சன் தயாரித்துள்ளன. இப்படம் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி […]
Continue reading …“தக்லைஃப்” திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. “நாயகன்” படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகவுள்ள படம் “தக்லைஃப்.” சமீபத்தில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்-ரஹ்மான் இசையமைக்கிறார். ‘தக்லைஃப்’ படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் பிலிம்ஸ் இன்று ‘தக்லைஃப்’ படத்தின் முக்கியய […]
Continue reading …