‘லவ் & வார்’ திரைப்பட நடிகர்கள் அறிவிப்பு!

Filed under: சினிமா |

பன்சாலி மிகப்பிரம்மாண்டமாக அழகியல் தன்மையோடு புராணப் படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய “கங்குபாய் கத்யவாடி” திரைப்படத்துக்காக ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

அவர் 1952ம் ஆண்டு வெளியான “பைஜு பாவ்ரா” படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷால் நடிப்பில் “அவர் லவ் அண்ட் வார்” என்ற படத்தை அறிவித்துள்ளார். இந்த படம் 2025ம் ஆண்டு கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.