இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமாரின் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் […]
Continue reading …இசை ரசிகர்களுக்கு எப்போதும் எவர் கிரீன் ஹிட் கொடுப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ‘ஹி1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் […]
Continue reading …கடந்த சில நாட்களாக அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது. நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அஜீத் படக்குழுவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அஜீத் உட்பட குழுவினர் சென்னை திருப்புகின்றனர் என்றும் இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைவதாகவும் கூறப்பட்டது. அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் […]
Continue reading …“தி கோட்” படத்தில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் இப்படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக […]
Continue reading …நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. […]
Continue reading …சிறுத்தை சிவா சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் […]
Continue reading …இன்று மாலை நடிகர் சூரி நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னபென் நடிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். “விடுதலை 2” மற்றும் “கருடன்” ஆகிய இரண்டு வெற்றி படங்களை […]
Continue reading …நடிகர் பிரகாஷ்ராஜ் ஆந்திரா, பீகாரை தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா தான் என்று மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் […]
Continue reading …மாரிசெல்வராஜ் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடித்த “கர்ணன்,” உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு “மாமன்னன்” திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு […]
Continue reading …நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பின் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் “லிப்ட்” மற்றும் “டாடா” உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து அவர் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் “கிஸ்” என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மூன்று […]
Continue reading …