சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்டவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் மற்றும் டிரெயிலர் கோடிட்டு காட்டியது. இத்திரைப்படம் “சலார்” ரிலீசான நாளில் டிசம்பர் 22ம் தேதி ரிலீசானது. தமிழகத்தில் 180 திரையரங்குகளில் மட்டுமே ரிலீசான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது இரண்டாவது வாரத்தில் இப்படத்துக்கு […]
Continue reading …“இந்தியன் 2” திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். […]
Continue reading …ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசாக உள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
Continue reading …கடந்த டிசம்பர் 1ம் தேதி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் “பார்க்கிங்” படம் ரிலீசானது. இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி தயாரித்திருந்தது. படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நகர்ப்புறங்களில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக […]
Continue reading …சமீபத்தில் நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மத்திய மற்றும் மாநில அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்து வருகிறது. நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா […]
Continue reading …தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் […]
Continue reading …தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதங்களில் அவர் உடல்நிலை சீராக இல்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு […]
Continue reading …இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் “நேரம்,” “பிரேமம்“ மற்றும் “கோல்ட்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.இவர் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை எனவும் கூறினார். இப்போது அவர் அஜீத்குமார் சம்மந்தமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். […]
Continue reading …ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசுக்காக தயாராகி உள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் […]
Continue reading …ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனம். ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய “தமிழ் ராக்கர்ஸ்” என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. ஏவிஎம் நிறுவனம் இப்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க உள்ளது. ஆனால் அவர்கள் படம் தயாரிக்கப் […]
Continue reading …