Home » Archives by category » சினிமா (Page 64)

“லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

Comments Off on “லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். இப்போது “லியோ” படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. படம் கேரளாவில் […]

Continue reading …

ரகசிய திருமணம் செய்ததாக அறிவித்த பிரபல நடிகை!

Comments Off on ரகசிய திருமணம் செய்ததாக அறிவித்த பிரபல நடிகை!

நடிகை ராஷ்மிகா இந்தியளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக “நேஷனல் க்ரஷ்” என்று அழைத்து வருகின்றனர். ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின. படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, […]

Continue reading …

ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

Comments Off on ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்.” இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் முதல் சிங்கில் “காவாலா,” 2 வது “சிலில் குஹூம்,” 3 வது […]

Continue reading …

“மரகத நாணயம்” இரண்டாம் பாகம் எப்போது?

Comments Off on “மரகத நாணயம்” இரண்டாம் பாகம் எப்போது?

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில்வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இத்திரைப்படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது. அதையடுத்து ஆதி நடித்த “வீரன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நீண்டகாலமாக “மரகத நாணயம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய […]

Continue reading …

ஓடிடியில் ரிலீசான மாமன்னன்!

Comments Off on ஓடிடியில் ரிலீசான மாமன்னன்!

உதயநிதி மற்றும் வடிவேலு நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த “மாமன்னன்” கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Continue reading …

‘ஜெயிலர்’ படம் பற்றிய அப்டேட்!

Comments Off on ‘ஜெயிலர்’ படம் பற்றிய அப்டேட்!

ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது. ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி […]

Continue reading …

அப்துல் கலாமை நினைவு கூறும் கமல்ஹாசன்!

Comments Off on அப்துல் கலாமை நினைவு கூறும் கமல்ஹாசன்!

மக்கள் ஜனாதிபதி என்றும், ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள் தயாரித்து கொடுத்தார். எளிமையாக வாழ்த்த அவர், தன் பதவி காலத்திலும் சரி, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னும் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று வாழ்ந்தவர் ஆவார். லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய சாதனையாளர். இளைஞர்களே கனவு காணுங்கள் தூங்கும்போது வருவதல்ல கனவு, உங்களை எது தூங்கவிடாமல் செய்வதே […]

Continue reading …

“கேப்டன் மில்லர்’’ பட டீசர் எப்போது ரிலீஸ்?

Comments Off on “கேப்டன் மில்லர்’’ பட டீசர் எப்போது ரிலீஸ்?

“கேப்டன் மில்லர்’’ ஜூலை 28ம் தேதி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கி வரும் படம் “கேப்டன் மில்லர்.” இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீசானது. வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் […]

Continue reading …

சுதீப் ஸ்டைலில் முடிவெட்ட வேண்டாம்; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Comments Off on சுதீப் ஸ்டைலில் முடிவெட்ட வேண்டாம்; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம் எனகர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளார் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார். இவர், தாயவ்வ, கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து “புலி,” “நான் ஈ” உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுதீப் “ஹெப்பிலி” படத்தில் நடித்து வருகிறார். […]

Continue reading …

சூர்யாவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

Comments Off on சூர்யாவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் படம் “கங்குவா.” இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியானது. இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகரும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகனுமான பாபி தியோல் வில்லனாக நடிக்கவுள்ளதாக […]

Continue reading …