ரஜினி ரசிகர்கள் அமெரிக்காவில் நடத்தும் கிரிக்கெட் தொடர்!

Filed under: உலகம்,சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்.”

இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் முதல் சிங்கில் “காவாலா,” 2 வது “சிலில் குஹூம்,” 3 வது சிங்கில் “ஜுஜுபி” நேற்று ரிலீசானது. இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் தகவல் வெளியானது. அதன்படி, இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும், அதாவது இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் என கூறப்படுகிறது. படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால், அமெரிக்காவில் டெலாவர் மகாணத்தில் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர் நடத்தவுள்ளனர். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இத்தொடர் நடக்கவுள்ளது. இதற்கு ஜெயிலர் கிரிக்கெட் கப் என்று பெயரிட்டுள்ளனர்.