Home » Archives by category » சினிமா (Page 67)

பிரபாஸ் மற்றும் கமல் படத்தின் அப்டேட்!

Comments Off on பிரபாஸ் மற்றும் கமல் படத்தின் அப்டேட்!

“பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் திரையுலகில் உயர்ந்தது. இந்தியா முழுவதும் பிரபலமாகி, பான் இந்திய ஸ்டாராக அறியப்படுகிறார். பிரபாஸ் “கேஜிஎப்” இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், “சலார்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது. நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் […]

Continue reading …

நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ், நடிகர் விஜய் இலவச கல்விப் பயிலகம் இன்று தொடங்கவுள்ளது மாணவர்களுக்கு விஜய் செய்வது நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ளார். இன்று முதல் காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக நேற்று முன் தினம் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய […]

Continue reading …

ரஜினி படத்தின் அப்டேட்!

Comments Off on ரஜினி படத்தின் அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் தோல்வியை சந்தித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அண்ணாத்த” திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இவ்விருவரும் இணைந்துள்ள திரைப்படம் “ஜெயிலர்.” இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இப்படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் […]

Continue reading …

நடிகர் பரத் சினிமா குறித்து பேச்சு!

Comments Off on நடிகர் பரத் சினிமா குறித்து பேச்சு!

கடந்த ஆண்டே நடிகர் பரத்தின் 50வது திரைப்படத்திற்கு “லவ்” என்ற டைட்டில் வைக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்க, மற்ற முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சக்திவேல் இயக்கியுள்ளார். ஜூலை 28ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அதையொட்டி படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கொலை திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரெயிலர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. படத்தின் பத்திரிக்கையாளர் […]

Continue reading …

“பரம்பொருள்” டீசர் வெளியானது!

Comments Off on “பரம்பொருள்” டீசர் வெளியானது!

சமீபத்தில் நடிகர் சரத்குமார் நடித்த “போர் தொழில்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவ்வாண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றானது. இப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான “பரம்பொருள்” டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அமிதாஷ் முக்கிய வேடத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜ் டிவிட்டரில் வெளியிட்டார்.  

Continue reading …

சம்ந்தாவால் சர்ச்சை!

Comments Off on சம்ந்தாவால் சர்ச்சை!

“நடிகையர் திலகம்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும், ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் “குஷி” படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படக்குழு இதுகுறித்த அறிவிப்பில், விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள “ஆராதயா” பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. அப்பாடலில் விஜய் […]

Continue reading …

சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Comments Off on சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்காக சிம்பு தயாராகி வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதையடுத்து சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் “அடங்கமறு” இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருந்தாலும் சிம்பு இப்போது லண்டன் மற்றும் மலேசியா என நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் கச்சேரிக்காக இப்போது முகாமிட்டுள்ள சிம்பு, நீண்ட தலைமுடி மற்றும் […]

Continue reading …

ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

Comments Off on ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

நடிகர் விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகவுள்ளது. விஷாலின் 34வது படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரின் காம்பினேசனில் உருவான “தாமிரபரணி” படத்தை அடுத்து, ஹரி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு விஷால், ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் முகேஷ் திவாரி ஆகியோரின் நடிப்பில் வெளியானது “பூஜை” படம். அதன் பிறகு விஷால் 34 திரைப்படத்திற்கு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். […]

Continue reading …

மாலத்தீவில் ரஜினிகாந்த்!

Comments Off on மாலத்தீவில் ரஜினிகாந்த்!

சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான “லால் சலாம்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆகஸ்ட் 10ம் தேதி “ஜெயிலர்” திரைப்படமும் அதனை அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து “லால் சலாம்” திரைப்படமும் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் […]

Continue reading …

கங்குவா திரைப்படத்தின் அப்டேட்!

Comments Off on கங்குவா திரைப்படத்தின் அப்டேட்!

சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்போது கொடைக்கானலில் […]

Continue reading …