ரஜினி படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

நெல்சன் இயக்கத்தில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் தோல்வியை சந்தித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அண்ணாத்த” திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இவ்விருவரும் இணைந்துள்ள திரைப்படம் “ஜெயிலர்.” இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இப்படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்போது முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணிநேரம் 43 நிமிடங்களாக இருக்கும் என தற்போது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.