
பாலிவுட்டின் பிரபல நடிகரான நவாசுதீன் சித்திக் தனது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தம்பியிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக்கின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை வீட்டிற்குள் விட நவாசுதீன் மறுப்பதாகவும் கூறி, […]
Continue reading …
தெலுங்கு திரைப்பட நடிகரின் திரைப்படம் விஜய்யின் லியோ படத்தோடு மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கின் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி வாரியர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடித்து வரும் ஆக்ஷன் திரைப்படம் அக்டோபர் […]
Continue reading …
கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் ரிலீசான “சர்காரு வாரிபாட்டா” திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அவரின் அடுத்த திரைப்படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேலாகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படமாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமலா […]
Continue reading …
மார்ச் 30ம் தேதி வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து ரிலீசாகவுள்ள திரைப்படம் “விடுதலை.” மேனன் ராஜீவ்மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Continue reading …
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “ஆர்சி 5” படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு […]
Continue reading …
“பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆன்லைன் ரம்மியை விட மோசமானது டாஸ்மாக், அதை மூடுங்கள்” என்று பதிவிட்டள்ளார். இதுவரையிலும் ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. “ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது, எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள். குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம், இக்கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு எழுக்காதீர்கள். உங்களால் தாங்கிக் கொள்ள […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் தந்தை மறைவிற்கு நடிகர் அஜித்தை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத்தை நேரில் சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் நேரில் சென்று அஜீத்துக்கு ஆறுதல் அளித்தனர். இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத் வீட்டிற்கு சென்று […]
Continue reading …
பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னனடம் என பல்வேறு மொழிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகியான இவர், இங்கிலாந்து நாட்டில் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மூளையில், ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவருக்கு கழுத்தில் கடும் வலி இருந்ததாகவும், இன்று அவரைப் பார்க்கச் […]
Continue reading …
நடிகை சாயிஷா சிம்புவின் திரைப்படத்திற்காக தான் டான்ஸ் ஆடியதை குறித்து மனம் திறந்துள்ளார். பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவர் “கஜினிகாந்த்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வருடம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் சாயிஷா. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படத்தில் “அடாவடி” என்ற ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆடியுள்ளார். இதை குறித்து சமூகவலைதளங்களில் […]
Continue reading …
ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உட்பட பல மொழிப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு வாரமும் சுமார் பத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வகையில், பதான்: ஷாருக்கான் நடித்த படம் அமேசானில் ரிலீசாகிறது. பகாசூரன்: மோகன் ஜி இயக்கிய இந்த படம் அமேசானில் வெளியாகிறது. ரிலீஸ் ஹண்ட்டர் இந்தி வெப்தொடர் அமேசானில் ரிலீசாகிறது. செங்களம் என்ற தமிழ் வெப்தொடர் ஜீ5 சேனலில் ரிலீசாகிறது. […]
Continue reading …