
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் பணியிடை நீக்கம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
Continue reading …
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு – பக்தர்கள் அதிர்ச்சி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டாளை தரிசித்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலின் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாசலில் 2 யானை சிலைகள் இருந்தன. […]
Continue reading …
திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது. போலீசார் நடவடிக்கை. 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5, ஆயிரம் வழங்க கோரியும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு டிஎன்சி டிஎன்டி என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் டி. என்.டியாக வழங்க கோரி, தமிழ்நாட்டில் சாதிவாரி […]
Continue reading …
சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 4 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சீமான் வேண்டுகோள். திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் பிரபு தனபால் முன்னிலை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அப்போது அவர் பேசும் போது, சிறப்பு […]
Continue reading …
தமிழகத்தில் தங்கம் விலையானது இரண்டு நாட்களுக்கு பின் குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம். தமிழகத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் இதன் விலை சற்று குறைந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால், இன்று (பிப்.3) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ. 5870க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. […]
Continue reading …
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மக்களவைத் தேர்தலையொட்டி வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமை ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை சென்னையில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, […]
Continue reading …
பேருந்துகளில் டிக்கெட்டின்றி பயணித்த 4,223 பயணிகளிடமிருந்து அபராதத் தொகை ரூ.4,71,600- வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது, மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் 178(B) பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை […]
Continue reading …திருச்சி மாநகர காவல் துறையில், தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம். மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகர காவல் துறையில், தனிப்படை போலீஸார் 5 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய வர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை ஒன்று செயல்பட்டு வந்தது. அவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமைக் காவலர்கள் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் “நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரினை நடிகர் விஜய் நேற்று அறிவித்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, “விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு […]
Continue reading …