தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது.

Filed under: தமிழகம் |

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது.

போலீசார் நடவடிக்கை.

60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5, ஆயிரம் வழங்க கோரியும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு டிஎன்சி டிஎன்டி என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் டி. என்.டியாக வழங்க கோரி,

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும்
திருச்சி நெ.1 டோல்கேட்-யில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடைவிதித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற அய்யாக்கண்ணு வீட்டின் முன்பாக அவரையும், அவரது ஆதரவாளர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் விட்டில் கைது செய்தனர்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.