
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது .இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார். இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு […]
Continue reading …
நடிகர் விஜய் எங்களுக்கு அண்ணன்: தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி. திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7-ந் தேதி தொடங்கி 11 -ந் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐ.சி.ஆர்.எஸ் எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பன்னாட்டு […]
Continue reading …
இன்று தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் மீது கவனம் செலுத்தும் தேசிய புலனாய்வு முகமை பல இடங்களில் அவ்வபோது திடீர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் இன்று காலை முதலே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி என பல பகுதிகளில் பல நபர்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து, “அரசியல் என்பது பெருங்கடல்: விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா?” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சற்றுமுன் தனது அரசியல் கட்சி பெயரை வெளியிட்டார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் உதயநிதி அல்லது விஜய் மற்றும் அண்ணாமலை என தமிழக அரசியல் இருக்கும் […]
Continue reading …
தேமுதிக நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த தெளிவாக திட்டமிட்டு செயல்பாட்டில் இறங்கி வருகிறது. மாநில, தேசிய கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் சூழலை பொறுத்த வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிளவுப்பட்டதால் ஒரு மும்முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுகவிற்கு விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உள்ள நிலையில், தங்களுடன் மற்ற சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அதிமுக, பாஜக […]
Continue reading …
இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு பரபரப்புகள், விவாதங்கள் நடந்து வந்த சூழலில் இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்தே விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய் 3 பக்கத்திற்கு நீளமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். அதில் தனது நோக்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல […]
Continue reading …
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த அறிவிப்பை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமாக அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. கட்சி பெயரை அறிவித்ததை அடுத்து பிரம்மாண்டமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷனரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பதிவு செய்த […]
Continue reading …
ஒடிசாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து போது மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள், தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜஜாபூர் […]
Continue reading …
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் பெண்ணடம் காமராஜர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் பணியின் காரணமாக சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தில் ஏறி சி.கொத்தங்குடி தோப்பு செல்லும் வழியில் திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதறிப் போன மணிகண்டன் மற்றும் […]
Continue reading …
Paytm பேமெண்ட் வங்கி சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இனி Paytm செயலில் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள் மற்றும் பாஸ்ட் டேக் போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க RBI தடை விதித்துள்ளது. இந்தத நடவடிக்கை Paytm நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பணம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்த Paytm நிறுவனம் 500 மில்லியன்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு […]
Continue reading …