
உலக சுகாதார மையம் உலகம் முழுதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் நிதி கோரியிருந்தது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு உரிய மரியாதை கொடுக்கிறோம். அரசியலில் முன்னுக்கு வர நினைக்கும் அவருக்கு இது நல்லதல்ல. இதைக் காழ்புணர்வுடன் கூறவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை” என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு […]
Continue reading …
சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையமும், வெதர்மேனும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் இனி மழை பெய்யாது என அறிவித்திருந்தனர். ஆனால், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் 29ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் தென்மாவட்டங்களிலும் மிகப்பெரிய […]
Continue reading …
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் அண்ணாமலையை கைது செய்து திகார் ஜெயிலுக்கு அனுப்புவோம் என கூறியதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார். அவர் அளித்த பதிலில், “2024ம் ஆண்டுக்குள் இந்தி கூட்டணியே இருக்காது அந்த கூட்டணி இருந்தால் தானே ஆட்சியைப் பிடிக்கும். இந்தி கூட்டணி கட்சி தலைவர்களிடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில கட்சிகள் விரைவில் வெளியேறும், இந்தி கூட்டணியே காணாமல் போய்விடும். இந்தி கூட்டணி […]
Continue reading …
கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை கோவையிலிருந்து பாஜக சார்பில் அனுப்பி வைக்கும் பணியை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம், “பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர் […]
Continue reading …
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வானிலை மையம் அதிநவீனமானது, உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியின்போது, “அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது, ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, […]
Continue reading …
பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் இத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்மொழியின் சொத்துக்கள் முடக்கம் குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில், “கடந்த 2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது. 2016ம் ஆண்டு வழக்கில் […]
Continue reading …
நேற்றிரவு தனது நண்பர்களுடன் கல்லூரி மாணவர் ஒருவர் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கினர். திடீரென அவர் இன்று காலை மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சூலூர் பகுதி அருகே தனியார் கல்லூரியில் திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 18 வயது மாணவர் படித்து வருகிறார். இன்று காலை அவர் திடீரென தனது அறையில் சடலமாக இருந்ததால் சக மாணவர்கள் கூட பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் தூக்கத்திலேயே […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் அமராவதி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறது. மறைந்த அமராவதி அம்மாள் அவரது உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பின் உருவான அன்னையை இழந்து […]
Continue reading …
பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்த நிலையில் தற்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார். பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள தகவலின் படி பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக வட்டாரங்களில் இது குறித்து கூறப்படும் நிலையில் […]
Continue reading …