
சென்னை உயர்நீதிமன்றம் தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் ஒருவர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எம்பிர ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். […]
Continue reading …
பாஜக நிர்வாகி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து நேராக காவல் நிலையம் சென்று திடீரென தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார். இவர் ரூபாய் 51 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சத்யராஜ் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமினில் இருந்து வெளிவந்த அவர் நேரடியாக காவல் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறுபான்மையர் விவகாரத்தில் அரசியல் புரிதல் இல்லாமல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். மேலும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் குறித்தும் அவர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து “சீமான் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்திட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிததத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை, குறுவை நெற்பயிரையும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் காப்பாற்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட காவிரி நீர் பற்றாக்குறையை தீர்க்க கர்நாடகா அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும், 80% நிரம்பிய சூழலிலும் கர்நாடகாவின் முக்கிய அணைகளிலிலிருந்து […]
Continue reading …
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகசரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு மீண்டும் கோடை காலம் தொடங்கி விட்டதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்கள் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பில், “கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன், த/பெ. சரவணன் (வயது 10) மற்றும் யோகேஸ்வரன். த./பெ.கணேஷ் (வயது8) ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று மதியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் […]
Continue reading …
நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் சோதனை செய்ததோடு அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை செய்தது. சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் சாமிநாதன் தோட்டத்து பங்களாவில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. திமுக பிரமுகர். சாமிநாதன் அமைச்சர் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி காண்பது உறுதி என தெரிவித்துள்ளார். நேற்று அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற நடை பயணத்தை சமீபத்தில் தொடங்கி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவர் பழைய பேருந்து நிலையம், ஐந்து விளக்கு, பெரியார் சிலை வழியாக நூறடி சாலையை நடந்தார். அப்பகுதியில் உள்ள மக்கள் முன் அவர் பேசிய போது “தமிழகம் புதுச்சேரியில் 40 […]
Continue reading …
இந்திய ராணுவம் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃபுளோராவுக்கு வாழ்த்து செய்தியில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. நேற்று ஃபுளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அந்த டுவிட்டை இந்திய ராணுவம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, தனது டுவிட்டரில், “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” […]
Continue reading …
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9ம் தேதி விழா கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தேதியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்டு 26ஆம் தேதி வேலை […]
Continue reading …