Home » Archives by category » தமிழகம் (Page 201)

நடிகை விந்தியா அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம்!

Comments Off on நடிகை விந்தியா அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம்!

நடிகை விந்தியா அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் திமுக அரசை திருத்த முடியும் என்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பேசியுள்ளார். நடிகை விந்தியா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம். தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது முதலமைச்சர் கள ஆய்வு செய்து வருவது தேவைதானா? […]

Continue reading …

முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு!

Comments Off on முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு!

பாஜக கூட்டத்தில் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருவல்லிக்கேணியில் கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என்றோம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதால் […]

Continue reading …

மகளிருக்கான தகவலை சொன்ன அமைச்சர் உதயநிதி!

Comments Off on மகளிருக்கான தகவலை சொன்ன அமைச்சர் உதயநிதி!

மாதம் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவடைந்து ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்குத் தெரியும் என்றும் குடும்ப தலைமை தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 இன்னும் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்குள் […]

Continue reading …

முதலமைச்சரின் பிறந்தநாள் குறித்து துரைமுருகனின் வேண்டுகோள்!

Comments Off on முதலமைச்சரின் பிறந்தநாள் குறித்து துரைமுருகனின் வேண்டுகோள்!

வருகின்ற மார்ச் 1ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதால் அன்றைய தினத்தில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மார்ச் 1ம் தேதியன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டிமாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இப்பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் […]

Continue reading …

பன்னாட்டு நிறுவனத்திலும் வருமானவரி சோதனையா?

Comments Off on பன்னாட்டு நிறுவனத்திலும் வருமானவரி சோதனையா?

வருமானவரியினர் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆகிய 11 மாநிலங்களில் 64 அலுவலகங்களில் […]

Continue reading …

அமைச்சர் உதயநிதியின் உடனடி நடவடிக்கை!

Comments Off on அமைச்சர் உதயநிதியின் உடனடி நடவடிக்கை!

தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன. அவ்வபோது மாணவ அமைப்புகளிடையே ஏற்படும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் என்ற மாணவரை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ […]

Continue reading …

பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!

Comments Off on பிரதமரை இழிவாக பேசிய இளைஞர் கைது!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட மாநிலத்தவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல், பிரதமரை இழிவாக பேசிய வீடியோ வைரலான நிலையில் அந்த இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டு நபர்கள் இடையேயான மோதல் கடந்த சில காலமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் இரு தரப்பிலும் பகைமை உணர்வு அதிகரிப்பதாக அஞ்சப்படுகிறது. சமீபத்தில் ரயில் ஒன்றில் பயணிக்கும் வடமாநில இளைஞர்களை தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கியதுடன், பிரதமர் மோடி […]

Continue reading …

பேருந்து நிலையத்தின் மேலேறி தற்கொலை முயற்சி!

Comments Off on பேருந்து நிலையத்தின் மேலேறி தற்கொலை முயற்சி!

இன்று காலை நெல்லை பேருந்து நிலையத்தின் மேலேறி வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பில்டிங் மேலே ஏறி ரகுவரன் என்ற வாலிபர் கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கீழே வலை விரித்து அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். பின்னர் விசாரணை செய்ததில், தான் வேலை செய்த இடத்தில் சம்பளம் ஒழுங்காக தராததால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் […]

Continue reading …

முன்னாள் நிதியமைச்சரின் கருத்து!

Comments Off on முன்னாள் நிதியமைச்சரின் கருத்து!

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்பதாலும் தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதாலும்தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ப சிதம்பரம், “பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையில்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை. பெரியார் காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக” என்று வட இந்தியர்களின் தமிழக […]

Continue reading …

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

Comments Off on திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் அம்மாவட்டத்தில் வரும் 22ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இதையடுத்து இன்று முதல் வரும் 22ம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை திருச்சி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதையடுத்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் […]

Continue reading …