
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கருணைக்கொடை ரூபாய் 3000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணை கொடையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் பணியாளர்கள் தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக்கை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த உத்தரவு […]
Continue reading …
பிறந்து 18 மாதங்களே ஆன மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உடல் உறுப்புகள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டதால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து குழந்தை கோமா நிலைக்குச் சென்றது. அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டதையடுத்து பெற்றோரின் அனுமதியுடன் அந்த குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் […]
Continue reading …
மத்திய வருவாய் புலனாய்வால் செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் […]
Continue reading …
இன்று போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் முடிந்து விட்டதை அடுத்து தங்கள் பணியை நீட்டிக்க வேண்டும் என்று 2300க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, “இன்று மாலை 3 மணிக்கு […]
Continue reading …
அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்என்.ரவி பேசுவது கடும் விமர்சனர்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி “மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை “தமிழகம்” என்று அழைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா தமிழ் நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள் என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார். அக்கட்சியின் […]
Continue reading …
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் விமான கோபுரத்தில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடங்கப்படுவதாக தொல்லியல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. 1000 ஆண்டுகளை கடந்து இக்கோவிலின் கோபுரம் கம்பீரமாக உள்ளது. மேலும் இக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம் மற்றும் மழைநீரால் படிந்துள்ள பாசிகளை அகற்றும் பணி நடைபெற […]
Continue reading …
சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக வாதம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று வாதம் செய்தது. இதில், “அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது. அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தால் கூட நான் தான் வெற்றி பெறுவேன். ஒற்றை தலைமையில் அமர்வேன், தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சியை […]
Continue reading …
புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான், இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது, அதனால் தான் தமிழ்நாடு […]
Continue reading …
கிருத்திகா உதயநிதி “காதலிக்க அஞ்சக் கூடாது..’ என தனது மகனின் புகைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனரும், அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், “காதலிக்கவோ, காதலை வெளியில் சொல்லவோ அஞ்சக்கூடாது. அது இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதியின் மகன் இன்பநிதி புகைப்படம் ஒன்றை சர்ச்சைக்குரிய வகையில் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வரும் நிலையில் அப்புகைப்படம் குறித்து தான் கிருத்திகா […]
Continue reading …