
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேர முடியாத 777 மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்தில், 2021&-22ம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு முடித்துவிட்டு, ஏழ்மை, வறுமையின் காரணமாக உயர்கல்வி செல்ல முடியாத 777 மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு கலை மற்றும் அறியல் கல்லூரிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வரவழைத்து மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் கல்லூரியில் உள்ளதா எனத் […]
Continue reading …
மாணவன் ஒருவன் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த மாதையன் தங்கமணியின் மகன் திவாகர். இன்று பள்ளிக்குச் சென்றபோது, பள்ளிபேருந்தில் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, படியில் நின்றிருந்த திவாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், அவர் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாணவன் திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவல் […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மிக கனமழையின் அளவு சீர்காழியில் பதிவகாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று சீர்காழியில் ஒரே நாளில் மட்டும் 44 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய மழை மேக வெடிப்பு காரணமல்ல என்றும் பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாகவே இந்த மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக அங்கு […]
Continue reading …
முதலமைச்சர் ரெங்கசாமி முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரையிலும் தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். முதல் முறையாக புதுவை முதல்வர் ரங்கசாமி தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளார். புதுவையில் தற்போது தீயணைப்புத் துறையில் 75 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் மனநிலையில் இதில் பெண்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றில், “பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி. இரவிச்சந்திரன். ராபர்ட் பயாஸ். சாந்தன். முருகன். ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும். விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். மாநில […]
Continue reading …
தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தடைந்தார். திண்டுக்கல்லில் பிரதமரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி காந்திகிராமம் செல்லும் வழியில் உள்ள பாஜக தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பு கையசைத்தார். பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]
Continue reading …
மதுரைக்கு பிரதமர் மோடி வரவிருப்பதையடுத்து மதுரை மற்றும் திண்டுக்கல் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். நவம்பர் 11ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பெங்களூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானத்தில் மதுரை வரவிருப்பதாகவும், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைகழகத்திற்கு அவர் வர […]
Continue reading …
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. நாளை முதல் தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 11-ம் தேதி அன்று கனமழை எச்சரிக்கை […]
Continue reading …
சமீபத்தில் திருப்பூர் அருகே 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி நிர்வாக அறங்காவலர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் சமீபத்தில், அந்த விடுதியில் […]
Continue reading …