மாணவன் ஒருவன் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த மாதையன் தங்கமணியின் மகன் திவாகர். இன்று பள்ளிக்குச் சென்றபோது, பள்ளிபேருந்தில் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, படியில் நின்றிருந்த திவாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், அவர் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாணவன் திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பலியான மாணவன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்பு.
மீனவர் நலனுக்காக ஒன்றிய அரசுடன் தொலைபேசியில் முதலமைச்சர் வலியுறுத்தல்
ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை முயற்சி!
தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு ...



