Home » Archives by category » தமிழகம் (Page 232)

ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைப்பு!

Comments Off on ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைப்பு!

ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை என்பவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நடுநந்தன்குளம் விக்டர் வயது 21, கோதைசேரி முருகேசன் வயது 23, தச்சநல்லூர் தாராபுரம் சஞ்சீவிராஜ் வயது 25, ஸ்ரீராம்குமார் வயது 21, ஆனந்த் வயது 21 உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரு சமூக ரீதியாக நடந்த இந்த கொலை வழக்கில் பனங்காட்டு […]

Continue reading …

சசிதரூரை வரவேற்காததற்கு என்ன காரணம்?

Comments Off on சசிதரூரை வரவேற்காததற்கு என்ன காரணம்?

அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரது ஆதரவும் யாருக்குமில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ஆனால், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் சத்தியமூர்த்திபவன் […]

Continue reading …

விருந்தில் உணவருந்திய இளைஞர் உயிரிழப்பு!

Comments Off on விருந்தில் உணவருந்திய இளைஞர் உயிரிழப்பு!

கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்திய விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய செல்வ முருகன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் அருகே திருவாசல் மெயின் ரோட்டில் வசிப்பவர் செல்லத்துரை. இவரது மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவருக்கு 5 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு 5ம் மாதம் மருந்து கொடுக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, நடந்த விருந்தில் 5 வகையான […]

Continue reading …

மாணவி தற்கொலை; இளைஞர் போக்சாவில் கைது!

Comments Off on மாணவி தற்கொலை; இளைஞர் போக்சாவில் கைது!

10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக தீனதயாளன் என்ற இளைஞரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் காட்டூர் வளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் மனைவி மகேஷ்வரிக்குஒரு மகள் (15) உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை மூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், தாயும் மகளும் வசித்து வந்தனர். அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன் (19) மாணவியுடன் பழகி வந்ததுள்ளார் […]

Continue reading …

நாளை திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட்!

Comments Off on நாளை திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட்!

நாளை மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையை பெறுவதற்கான திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், திமுக அரசு பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அறிவித்துள்ளது. அவ்வகையில், இவ்வருடம் முதல் தமிழகத்தில் 11ம் வகுப்பு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் அனைத்து வகைப்பாடப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. […]

Continue reading …

சிறுவர்கள் உயிரிழப்பு பற்றி அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

Comments Off on சிறுவர்கள் உயிரிழப்பு பற்றி அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

அமைச்சர் கீதா கீவன் திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தகவல் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் இன்று விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் […]

Continue reading …

ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்த ஆளுனர் ஒப்புதல்!

Comments Off on ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்த ஆளுனர் ஒப்புதல்!

தமிழக ஆளுனர் ரம்மி உட்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளினால் பலர் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் தங்களின் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் நிலை தொடர்ந்துள்ளது. இந்த ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சமீபத்தில், இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் […]

Continue reading …

திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்; எச் ராஜா!

Comments Off on திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்; எச் ராஜா!

பாஜக பிரமுகர் எச் ராஜா முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். திருமாவளவன், சீமான் ஆகிய இருவரும் தேச துரோகிகள். ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஸ்டாலின் நல்லவர் என்றாலும் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று […]

Continue reading …

ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் ரயிலில் விழுந்து தற்கொலை!

Comments Off on ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் ரயிலில் விழுந்து தற்கொலை!

இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மன விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் இயற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே […]

Continue reading …

இயக்குனர் கவுதமனின் எச்சரிக்கை!

Comments Off on இயக்குனர் கவுதமனின் எச்சரிக்கை!

இயக்குனரும், நடிகருமான கவுதமன் “பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் இப்படியிருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம், “தமிழ் நிலத்தை சோழ பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு. இத்திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றை சொல்லியிருக்க வேண்டும். சோழர்களின் சின்னமான புலி கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால் அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்து உள்ளார்கள். ஜெயமோகன் சோழர்கள் தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார், […]

Continue reading …