அமைச்சர் கீதா கீவன் திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தகவல் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் இன்று விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் தங்கியிருந்த இடம், இறந்த இடம், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கீதா ஜூவன், இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுவதால், காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார்.
Related posts:
பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டு வீரர் உயிரிழப்பு!
மின் உற்பத்தியை நிறுத்தியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்!
மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட நிவாரணம்: முதலமைச்சர் உத்தரவு!



