
டிடிவி தினகரன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். விவேகானந்தா சேவாலய விடுதி திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளின் விடுதியான இதில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என பேசியுள்ளார். இன்று வள்ளலாரின் முப்பெருவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுக அல்லது திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிராகதான் திமுக குரல் கொடுக்கும்” என்று கூறினார். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு தபால் உறையை […]
Continue reading …
தொழில்நுட்ப மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் மியான்மரிலிருந்து இன்று தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி செயல்களில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும், 17 மணி நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. […]
Continue reading …
போக்குவரத்துத்துறை வாய்மொழியாக டிக்கெட் எடுத்தும் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய விரும்பினால் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். அவ்வாறு டிக்கெட் கேட்கும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்குமாறு வாய்மொழியாக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவில் பேசிய போது பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பல பெண்கள் தாங்கள் […]
Continue reading …
உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்வதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றிய 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. கடந்த […]
Continue reading …
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் […]
Continue reading …
கேஸ் சிலிண்டர் வர்த்தக பயன்பாட்டிற்கான விலை அதிகரித்த நிலையில் கடந்த மாதம் போல இம்மாதமும் குறைந்துள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வர்த்த கேஸ் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பாக விலை உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த மாதம் முதலாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் […]
Continue reading …
அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மெய்யநாதன் சென்னை வந்தவுடன் அவருக்கு சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு […]
Continue reading …
யூடியூபர் டிடிஎப் வாசன் பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் டிடிஎப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சமீபத்தில், மதுரை ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, 150கிமீ வேகத்தில் பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார். இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட டிடிஎப் வாசன் மீது […]
Continue reading …
சமீபத்தில் நடத்துனரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செயலுக்காக சமூக தளங்களில் நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று பேசியது பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது […]
Continue reading …