உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்வதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றிய 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக அந்த சுங்கச்சாவடியில் எந்தவித கட்டணமும் பெறவில்லை. இந்நிலையில் போராட்டம் செய்து வரும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை.
டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர், உடனடியாக ஆக்ஷன் எடுத்த முதல்வர்!
அதிமுக அரசியல் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து!
மதுரையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - அலுவலகம் மூடப்...



