Home » Archives by category » தமிழகம் (Page 241)

தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

Comments Off on தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என்று கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார். அவர் எதிர்பார்த்த கட்சி ஆரம்பத்தில் வளர்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அவர் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர். அதன்பின், பிக்பாஸ் மற்றும் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவரது நடிப்பில் “விக்ரம்” வெளியான நிலையில், […]

Continue reading …

கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Comments Off on கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரியில் வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர். வரும் 8ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார். கேரளாவில் வருகிற 8ம் தேதி மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளன. இதையடுத்து அம்மாநிலத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி குமரி […]

Continue reading …

சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூம்!

Comments Off on சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூம்!

மகளின் சக மாணவன் நன்றாக படிக்கும் காரணத்தால் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ள பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காரைக்காலில் வசித்து வரும் மாணவர் மணிகண்டன் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியைவிட மணிகண்டன் நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண் பெற்று வந்துள்ளார். ஆனால், மாணவியால் மணிகண்டனை படிப்பில் மீறமுடியவில்லை. இந்நிலையில், பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் கலந்துவிட்டு வீட்டிற்குத் […]

Continue reading …

நாயால் உயிரிழந்த ஓட்டுனர்!

Comments Off on நாயால் உயிரிழந்த ஓட்டுனர்!

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் குறுக்கே நாய் வந்ததால் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற போது நாய் ஒன்று குறுக்கில் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை உடனே அருகில் உள்ளோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிழந்துள்ளார். நம் நாட்டில் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், அவற்றை முறையாக வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள் இருந்தாலும் ஒரு சிலர் நாய்களை அவிழ்த்து […]

Continue reading …

காதலிக்க மறுத்ததால் கழுத்து அறுப்பு!

Comments Off on காதலிக்க மறுத்ததால் கழுத்து அறுப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 வயது சிறுமி காதலிக்க மறுத்ததால் கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கவலை சென்னசமுத்திரம் மோட்டூரைச் சேர்ந்தவர் ராஜவேல் முருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி (16)யை காதலித்துள்ளார். அச்சிறுமிடன் சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அச்சிறுமி அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த நபர் அச்சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். அருகிலிருந்தோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, போலீசார் ராஜவேல்குமாரை தேடி […]

Continue reading …

குட்கா கடத்தல்; போலீசார் அதிரடி!

Comments Off on குட்கா கடத்தல்; போலீசார் அதிரடி!

போலீசார் கொடைரோடு அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட குட்கா பொருட்களை தனிப்படை மூலம் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வழியாக ஓசூரிலிருந்து காரில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி போலீசார் அதிகாலை 3 மணி முதலே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு அருகே திண்டுக்கலிருந்து- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரிலிருந்து மதுரைக்கு கார் ஒன்று சென்றுள்ளது. அதனை நிறுத்தி போலீசார் […]

Continue reading …

ஈரோட்டில் உடைந்த தடுப்பணை!

Comments Off on ஈரோட்டில் உடைந்த தடுப்பணை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் அதிகமாக உள்ளது. அதே போல் ஈரோட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரலவாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் மாக்காம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட […]

Continue reading …

திருத்தணி கோவில் அதிகாரிகளின் அசைவ விருந்து!

Comments Off on திருத்தணி கோவில் அதிகாரிகளின் அசைவ விருந்து!

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் கோவில் அதிகாரிகள் அசைவ உணவு உண்ணும் வீடியோ வைரலாகி உள்ளது. திருத்தணி பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் இல்லம், தணிகை இல்லம் ஆகியவற்றில் கட்டண அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலபேர் கோவில் குடியிருப்புகளில் தங்கியிருந்து விரதம் இருந்து தங்களது […]

Continue reading …

டிசி கொடுக்க ஒன்றரை லட்சமா?

Comments Off on டிசி கொடுக்க ஒன்றரை லட்சமா?

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் சான்றிதழ் வழங்க ரூ.1.5லட்சம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் எம்ஏஎம் மெட்ரிக் மற்றும் சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்களை தர மறுத்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பக்ருதீன் […]

Continue reading …

மூன்று வேளை உணவு ரூ.1!

Comments Off on மூன்று வேளை உணவு ரூ.1!

ஈரோட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவை ரூ.1க்கு வழங்கி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தம்பதியினர் சைவ உணவகம் நடத்தி வருகின்றனர். மதியம் சாப்பாட்டுக்கு ரூ.70ம், மாற்றுத்திறனாளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடனிருந்து கவனித்துக் கொள்பவர்களுக்கு மட்டும் மூன்று வேளையும் ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் இத்தம்பதியினரை […]

Continue reading …