Home » Archives by category » தமிழகம் (Page 258)

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறாரா மிஷ்கின்?

Comments Off on சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறாரா மிஷ்கின்?

இயக்குனர் மிஷ்கின் “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனரது அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் “மண்டேலா” திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். “டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே நடித்து முடித்துள்ள “அயலான்” படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியாகி […]

Continue reading …

திருவிழாக்களில் நாடகங்களுக்கு அனுமதி!

Comments Off on திருவிழாக்களில் நாடகங்களுக்கு அனுமதி!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோவில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகங்களை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கருப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவின்போது கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் பாடல் […]

Continue reading …

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

Comments Off on கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, திமுகவின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு […]

Continue reading …

முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

Comments Off on முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவில், மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, தக்காராக எல்.ஆதிமூலம் அவர்கள் உள்ளார். கோவிலின் துணை ஆணையராகவும், செயல் அலுவலராகவும் முல்லை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கோவிலில் பொறுப்பேற்ற நாள் முதல், கோவில் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. முக்கிய இலாகாவை வைத்திருக்கும் தமிழக அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு நெருக்கமானவராக கருதப்படும் முல்லை, சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாக, அவரின் கீழ் பணியாற்றிய பலர் […]

Continue reading …

ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

Comments Off on ஆளுனரை முதலமைச்சர் சந்திக்க காரணம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து பேசப்படலாம் என்றும் பேசப்படுகிறது. நீட் தேர்வு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Continue reading …

கல்விக் கொள்கைக்கு அரசாணை!

Comments Off on கல்விக் கொள்கைக்கு அரசாணை!

தமிழ்நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை திட்டங்களை ஏற்க முடியாது என்று கூறி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் […]

Continue reading …

லேடி சூப்பர் ஸ்டாரின் திருமண ஒளிபரப்பு ஓடிடியிலா?

Comments Off on லேடி சூப்பர் ஸ்டாரின் திருமண ஒளிபரப்பு ஓடிடியிலா?

தற்போது தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் விஷயம் நயனுக்கும், விக்கிக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்தைத்தான். இன்றைய நிலையில் ஹாட் டாப்பிக்கே அதுதான். அவர்களது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இணையதளம் ஒன்றில் நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. இத்திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி […]

Continue reading …

மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்யமான தகவல்!

Comments Off on மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்யமான தகவல்!

ஐஐடி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு என்னவென்றால், எந்த மாநிலத்தில் அதிக கோவில்கள் உள்ளன என்பதுதான். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல கடவுள்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலும் இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோவில்கள் அவர்களின் நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உள்ள நிலையில் ஏராளமான கோவில்களும் நாடு முழுவதும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மும்பை ஐஐடி எந்த மாநிலத்தில் அதிகமான கோவில்கள் உள்ளன என […]

Continue reading …

சிறுமியை கடத்திய இளைஞர் கைது!

Comments Off on சிறுமியை கடத்திய இளைஞர் கைது!

8ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 20 வயதுடைய இளைஞர் கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 13 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறியும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி உள்ளார் 20 வயதுடைய இளைஞர் ஒருவர். அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Continue reading …

விருது வேண்டாம்!

Comments Off on விருது வேண்டாம்!

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கோவை மாவட்டத்தின் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப்போகும் விருதை ஏற்க மறுத்துள்ளார். அவர் தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதமும் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு எழுதி கடிததத்தில், “மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் […]

Continue reading …