
ராமேஸ்வரத்தின் அருகே வடகாடு கிராமத்தில் சந்திரா என்ற 45 வயதான பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திரா அப்பகுதியில் கடல்பாசியை சேகரிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் பல பகுதிகளிலும் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்திரா பாசி சேகரிக்க செல்லும்போது அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அடிக்கடி அவரிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]
Continue reading …
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் கூட்டாக சேர்ந்து 12 மாவட்டங்களில் அடுத்தடுத்து கொள்ளை அடித்ததால் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளைகள் நடந்து வருவதை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் தெலுங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா- பாரதி, மணி -மீனா, விஜய் லட்சுமி ஆகிய 3 தம்பதியினர் இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்கம் […]
Continue reading …
கொரோனா தொற்று நோய் காலத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 11ம் வகுப்பிற்கு ஜூன் 27ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Continue reading …
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 104 டிகிரியை தாண்டியது வெப்பநிலை. அக்கினி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, […]
Continue reading …
மீண்டும் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை 11.15 மணி அளவில் மதகுகளை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலில் சுமார் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் […]
Continue reading …
வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் பகுதியில் உள்ள தனியார் குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிவு ஏற்பட்டு குவாரிக்குள் விழுந்தது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க 8 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தன. இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்டப்பட்டனர். நேற்று இரவு […]
Continue reading …
மக்கள் நீதி மய்யம் மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் மானியம் என்று அறிவித்து நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த மானியம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மட்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்கு மட்டுமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையை குறைத்தால் தான் […]
Continue reading …
தேனி மக்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுரையிலிருந்து தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த இந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன. தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்த வழிதடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட […]
Continue reading …
பின்னலாடை நிறுவனங்கள் நூல் விலை அதிகரித்துள்ள காரணத்தால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக நூல் விலை 120 முதல் 150 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் நிலையில் நூலின் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தன. நூல் விலை உயர்வைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர், கோவை, மாவட்டங்களில் நூல் விலை உயர்வை கண்டித்துக், ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாட்கள் வேலை நிறுத்த […]
Continue reading …