
முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் தரப்பு முடிவு. முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக 9.5.2012 அன்று அணைப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான […]
Continue reading …
நாளை மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இம்முகாம் 2 கோடி பேரை இலக்காக வைத்து நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இதனால் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமானில் உருவான […]
Continue reading …
தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டிற்கான முதுநிலை படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், இந்த தேர்வை ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர், இக்கோரிக்கையை ஏற்று ஜூலை 9ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதன் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிக்கை தகவல் மையம் ஒரு ஆய்வு செய்ததில், […]
Continue reading …
தன் பாட்டியையே எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை பேத்திகள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …
பள்ளி கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் அன்று அரை நாள் மட்டும் தேர்வு எழுத பள்ளிக்கு இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என்றும் விடுமுறைக்கு பின் […]
Continue reading …
தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விக்னேஷ் மரண வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விக்னேஷ் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் […]
Continue reading …
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் இன்று கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெட்டுபோன இறைச்சிகள் இறைச்சிக்கடைகளிலும், ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருவது கோழிக்கறியை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …
அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலுரை ஆற்றி வருகிறார். அவர் பேசியதாவது:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். அதோடு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு […]
Continue reading …
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு எழுத பயம் என்பதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்று தேர்வு எழுதினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசி வழங்கி வழியனுப்பினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு […]
Continue reading …