
பொதுமக்கள் எல்ஐசி ஐபிஓ வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி எல்ஐசி ஐபிஓ பங்குகளை 95 சதவீத பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 கோடியே 11 லட்சம் பங்குகளை விற்க எல்ஐசி முடிவு செய்துள்ள நிலையில் 2-வது நாளான இன்று வரை 95 சதவீத விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்று மடங்கு விண்ணப்பங்களும் எல்ஐசி ஊழியர்களுக்கு 7 சதவீத பங்குகளை […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களிலும் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் மற்றும் முன்கூட்டிய விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரையிலான […]
Continue reading …
மன்னார்குடி ஜீயர் “எங்களை எதிர்த்தா சாலையில் நடமாட முடியாது” என்று அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பட்டண பிரவேச […]
Continue reading …
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இன்றிலிருந்து அக்னி நட்சத்திர காலம் தொடங்கி விட்டது. தொடங்கிய இன்றே பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு பல மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெயில் அதிக அளவில் வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே நடமாடுவதை மக்கள் குறைக்க வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அக்கினி வெயில் […]
Continue reading …
அடுத்த இரண்டு நாட்களில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
Continue reading …
கொரடாச்சேரி, மே 3: திருவாரூரில், ஆயுள் தண்டனை குற்றவாளிகளை, சிறையில் அடைக்க திறம்பட செயல்பட்ட காவல் நிலைய தலைமை காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி அளித்து பாராட்டினார். கொரடாச்சேரி காவல் சரகம் இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்க திறம்பட செயல்பட்ட கொரடாச்சேரி காவல் நிலைய தலைமை காவலர் திரு. ரமேஷ் என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று (02.05.2022) […]
Continue reading …
நகைக்கடைகளில் இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்ற காரணத்தினால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் அவதிப்படும் மக்களுக்கு தேவையான உதவி செய்வதற்காக தாராளமாக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் […]
Continue reading …
சென்னை, மே 3: மளிகைப் பொருள் டெலிவரி சேவைகளுக்கு, டிரோன்களை ஸ்விக்கி நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இதற்காக, சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நம் நாட்டில், ஆன்லைனின் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் மற்றும் மளிகைப் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை, ஸ்விக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில், இந்த நிறுவனத்தின் டெலிவரி சேவைகளை, அதிக அளவிலான மக்கள் பயன்படுத்த துவங்கினர். இந்த சேவையின்கீழ், […]
Continue reading …
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. கல்விக்கும், தொன்மைக்கும் புகழ் பெற்ற தமிழ்நாடு இப்போது கஞ்சா, அபின் உள்ளிட்ட […]
Continue reading …