பருவநிலை மாற்றத்தால் 50% குறைந்த மல்லிகை மகசூல். மல்லிகை சாகுபடி, ஏப்ரல், மே மாதங்களில் ஏக்கருக்கு 20 கிலோ வரை அறுவடை செய்ய முடியும், ஆனால், மே மாதத்தின் நடுப்பகுதியில் பெய்த பருவ மழை காரணமாக 50 சதவீதம் அறுவடை குறைந்து ஏக்கருக்கு 10 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. மேலும் இந்த மழை மொட்டுக்களை பாதித்துள்ளதுடன், ஈரப்பதம் அதிகரிப்பால் பூச்சி தாக்குதலுக்கும் வழிவகுக்கும் என்று மல்லிகை பயிரிடும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Continue reading …இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் பிறந்தநாள் விழா. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாள் (சூன்-03.2024 ) மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி மதுரை மாநகர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுடர்மொழி தலைமை வகித்தார்.
Continue reading …பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு 2 பெண்கள் குழந்தைகளுடன் தர்ணா. திண்டுக்கல் மாவட்டம் பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு மகேஸ்வரி என்ற பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கணவர், மாமியார், மாமனார் கொடுமை செய்வதாக கூறி 2 குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கணவர் மீது பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு.
Continue reading …திண்டுக்கல் திமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமியின் ஆபாச நடனம். திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் திருவிழாவின்போது குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் அனைவரும் கூடி நின்ற இடத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமியின் ஆபாச நடனம். ஆபாச செய்கையால் அதிர்ச்சி அடைந்த மக்கள். தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் திமுகவினர் அதிர்ச்சி.
Continue reading …*சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு: ஜூன் 4 முதல் பக்தர்கள் அனுமதி.* வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் ஜூன் 4ல் பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி […]
Continue reading …உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனையின் படி வட்ட சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சட்ட ஆலோசனை பெறுவது, சட்ட அறிவுரை பெறுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Continue reading …*மார்ஷல் நேசமணி நினைவு நாள்*. மாவட்ட ஆட்சியர் மரியாதை. *குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவு தினத்தினையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை*
Continue reading …சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம். வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல். சாலையில் பள்ளத்தை சுற்றி தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.
Continue reading …சிதம்பரம் பல்கலை. தொழில்நுட்ப உதவியாளர் வீட்டில் 18 சவரன் நகைகள், ரொக்கம் ரூ.1 லட்சம் திருட்டு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியல் கல்லூரியில் பணிபுரியும் தொழில்நுட்ப உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளனர்.
Continue reading …திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தை சாலையில் அதிகாலை 4 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் பிளைவுட்ஸ் கடையில் தீ விபத்து. கடையில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் இருந்து சேதம். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Continue reading …