
மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி […]
Continue reading …
தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் […]
Continue reading …
மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. […]
Continue reading …
ஆவின்பால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி காலதாமதமாக விநியோகத்தால் பால் கெட்டுப் போவதாகவும், அதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பால் முகவர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் 4000 பால் டப்பா மறுசுழற்சி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக முகவர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
Continue reading …
மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மாவட்த்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை தினமாக கூறப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.
Continue reading …
தொடர்ந்து தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நான்கு விடுமுறை தினமானதாலும், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருக்கும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளது. தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
Continue reading …
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக நடந்தது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். வைகை ஆற்றில் அழகருக்கு முடியிறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கருப்பசாமி வேடமிட்டு திரிபந்தம் ஏந்தி ஆட்டம் ஆடி நேர்த்திக் கடன் செலுத்தினர். அழகருக்கு சொம்பில் சர்க்கரை நிரப்பி தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் மீது […]
Continue reading …
பக்தர்களுக்கு கள்ளழகர் எழுந்தருளல் திருவிழாவில் வைகையில் இறங்க அனுமதி இல்லை. மதுரையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிலையில் இந்த வைபவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வழிபடும் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை காண பக்தர்களுக்கு அனுமதி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப […]
Continue reading …
இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானவர் என்று புகர்ந்துள்ளார். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தத புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் […]
Continue reading …