Home » Archives by category » தமிழகம் (Page 277)

திருச்சி என்.ஐ.டி : 57 வது பட்டமளிப்பு விழா!

Comments Off on திருச்சி என்.ஐ.டி : 57 வது பட்டமளிப்பு விழா!

25.09.2021: டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரும், இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் தலைவருமான  டி.வி. நரேந்திரன், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியின் (என்.ஐ.டி திருச்சி)  57 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், கற்றலுக்கு முடிவே இல்லை; ஒருவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டே இருக்கின்றார் என்றார், அவர் மாணவர்களை விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகளைத் தொடருமாறு கூறினார். அவர் மாணவர்களை உறவுகளை கட்டமைக்கவும்,வளர்க்கவும், அவைளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினார். தான் […]

Continue reading …

சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு […]

Continue reading …

ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

Comments Off on ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

ஆவினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல -ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை ! தாய்ப்பாலுக்கு நிகரான பால் என தமிழக அரசால் விளம்பரப்படுத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தில் மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுமார் 10,295 பால் மாதிரிகளில் 51% பால் மாதிரிகள் அரை மணி நேரத்தில் கெட்டு விடக் கூடியதாக தரம் குறைந்து இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள தணிக்கைத்துறை […]

Continue reading …

4 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Comments Off on 4 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, செப் 25: “திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன், திமுக சார்பில், 500க்கும் அதிகமான வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களிடமும், தாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். […]

Continue reading …

வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்

Comments Off on வங்கக் கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல்

சென்னை, செப் 25: ‘வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ‘குலாப்’ புயல் உருவாகும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை […]

Continue reading …

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96; டீசல் ரூ.93.26க்கு விற்பனை

Comments Off on ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96; டீசல் ரூ.93.26க்கு விற்பனை

சென்னை, செப் 24: சென்னையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல், 98.96 ரூபாய்க்கும், டீசல், 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள், பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களின் கவலையை போக்கும் விதமாக, தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால், சமீபத்தில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் […]

Continue reading …

தமிழகத்தில் 26ம் தேதி 3வது தடுப்பூசி முகாம்

Comments Off on தமிழகத்தில் 26ம் தேதி 3வது தடுப்பூசி முகாம்

சென்னை, செப் 24: “தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, வரும் 26ம் தேதி, தமிழகம் முழுதும், மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது” என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தமிழகம் முழுதும் மாபெரும் தடுப்பூசி முகாம், 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக, 28 லட்சத்து, 91 […]

Continue reading …

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

Comments Off on இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் […]

Continue reading …

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு

Comments Off on 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு

சென்னை, செப் 23: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நேற்று நடந்த இந்த விழாவில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்: திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. புதிய […]

Continue reading …

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் தகவல்

Comments Off on தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செப் 22: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல், விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், […]

Continue reading …