
நெற்றிக்கண் செய்தி எதிரொலி ! களத்தில் குதித்த திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ்.பி.சக்ரவர்த்தி கடந்த 2.7.2021 நமது நவீன நெற்றிக்கண் வார இதழில், ” திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு காத்திருக்கும் சவால்கள் ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறாக ஓடும் கள்ள சாராயம், மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்றவைகளை புதிய எஸ்.பி.யான சிபிசக்கரவர்த்தி தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தோம். […]
Continue reading …
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் உரிய நெறிமுறைகளுடன் திறக்கக்கோரி தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சங்கத்தினர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்த விபரமாவது. கொரானா குறைந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் வகைப்பாட்டில் மூன்றாம் நிலையில் நிலவுவதால் இங்கு வழிபாட்டு தலங்கள் திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரானா தொற்று குறைந்து […]
Continue reading …
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது. மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக […]
Continue reading …
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முதன் முதலாக திறக்கப்பட்ட வங்கி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியாகும். அக்டோபர் 1977ல் நாகூர் தெருப்பள்ளி தெருவில் திறக்கப்பட்டு சிறப்பாக 44 வருடங்களாக இயங்கிவந்தது. கட்டிட மேம்பாடு தேவையின் காரணமாக இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிதான கட்டிடத்தில் நாகூர் மெயின் ரோடு அரசு மருத்துவமனை எதிரே இன்று திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைக்கினங்க பல்வேறு புதிய வசதிகள் இங்கு ஏற்படுத்தபட்டுள்ளன. புதிய வங்கி அலுவலகத்தை நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும் முன்னாள் தர்கா பிரசிடன்டுமான செய்யது […]
Continue reading …
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு […]
Continue reading …
தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் […]
Continue reading …
தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை காலையுடன் முடிவடையவிருக்கும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து 11&ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் […]
Continue reading …
நாம் ஏற்கனவே தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் கொரனா உதவியாக நம் நெற்றிக்கண் பத்திரிக்கை சார்பாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பலருக்கும் அரிசி, மளிகை , காய்கறி என்று பல பொருட்களை இயன்ற அழவில் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் தான் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையைஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் பளியர்கள் எனப்படும் மலை வாழ் பழங்குடி இன மக்களின் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]
Continue reading …
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]
Continue reading …
BREAKING: மீண்டும் இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு! புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெளிமாநிலங்கள் வழியாக […]
Continue reading …