
சசிகலா வரும் போது அரசியலில் ஒரு சில அதிர்வுகள் ஏற்படும் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வழியில் சசிகலா பயணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்ட நாளில்,அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் திறந்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார். தமிழக அரசு ஆறுபடை வீடுகள் இருக்கும் […]
Continue reading …
திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலா விடுதலையையொட்டி, “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வாழ்க.. […]
Continue reading …
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா நடைபெறவுள்ளது. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் இவ்விழா நடைபெறவுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜனவரி 27-ம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவினையொட்டி காமராஜர் சாலையில், வார் மொமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு […]
Continue reading …
உலோகப் பாத்திரங்களில் நாம் சமையல் செய்து சாப்பிடும் போது நன்மையை விட அதிக அளவு தீமையே உண்டாகிறது. அலர்ஜி முதல் தைராய்டு, நீர்கட்டி, இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அலுமினிய பாத்திரத்தில் ஏற்படும் தீமை: அலுமினிய பாத்திரத்தில் உள்ள கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்சைடாக மாறி சமைக்கும்போது உணவுடன் கலந்து நமது உடலுக்குள் செல்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் அதிக அளவில் பாதிக்கின்றது. இண்டோலிய பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்: அலுமினியம் மற்றும் […]
Continue reading …
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது, இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்!! நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி வழக்குகளை கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களிடம் கிளை தொடர்பு தகவல்களுக்கு கூகிள் தேடுபொறியில் கிடைக்கும் தொடர்பு எண்கள் மற்றும் விவரங்களை அனுக்குவதற்கு முன் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என எச்சரித்ததுடன், இதற்காக, […]
Continue reading …
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது கூட்டணி கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தேமுதிக தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என […]
Continue reading …
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால்சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் நுரையீரலில் தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து வெளியான […]
Continue reading …
தமிழகத்தில் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச்சில் தமிழக பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இம்மாதம் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள், ஆசிரியர்களால் […]
Continue reading …
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பைனான்ஸ் நிறுவனத்தில் தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நான்கு […]
Continue reading …
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் புதிதாக ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இருதினங்களாக 25, 30 பேருக்கு தொற்று பாதித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது […]
Continue reading …