
ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை! கொரோனா காரணமாக தமிழகத்தில் ஜிஎஸ்டி இழப்பு 35,000 கோடியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி வருவாய் அதிகமாக அளிக்கும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது. இந்நிலையில் […]
Continue reading …
டிவிட்டரில் உதவிக் கேட்ட இளைஞர்… உடனடியாக ஆக்ஷன் எடுத்த முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ! தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்ட உதவியை அடுத்து முதல்வர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் ‘என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுறன். மருத்துவரிடம் […]
Continue reading …
கோவை,மே 22 தமிழகத்தில் உள்ள கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால், வருகிற மே 26 ஆம் தேதி அன்று அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கோவில்களை திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26ம் தேதி […]
Continue reading …
கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மூன்றாம் கட்டம் மற்றும் நான்காம் கட்டத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தருணத்தில் நாளை முதல் தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இயங்குவதற்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்கலாம். ஆட்டோவில் ஓட்டுனர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டும் அனுமதி. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் […]
Continue reading …
பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா? திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி பி துரைசாமி நேற்று விடுவிக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த […]
Continue reading …
புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை! தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் செலவினங்களைக் குறைக்க பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கொரோனா பேரிடரால் உலக நாட்டு அரசுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் மாநில அரசுன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போதுமான நிதி இன்னும் வந்து சேரவில்லை. இதனால் மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் செலவினங்களைக் […]
Continue reading …
தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் பொது கணக்கு குழு உள்ளது. அந்த குழுவில் செங்கல்பட்டை சேர்ந்த ஊழியர் பணிபுரிந்து வருகின்றார். நேற்று வேலைக்கு வந்த அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வேலை பார்த்து வந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறை மூடப்பட்டது. கொரோனாவின் காரணத்தால் சென்ற 18ஆம் தேதி முதல் 50% ஊழியர்களைக் கொண்டு தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் […]
Continue reading …
சென்னை, மே 21 தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ((FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சின்னத் திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள், சுற்றுச்சுவர் […]
Continue reading …
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை! மத்திய அரசு மாநிலங்களுக்காக 5002.5 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தொகுப்பை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து திரும்ப வரும் நிதி மிகவும் கம்மியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை […]
Continue reading …