தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா – அலுவலகம் மூடப்படுமா?

Filed under: தமிழகம் |

தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் பொது கணக்கு குழு உள்ளது. அந்த குழுவில் செங்கல்பட்டை சேர்ந்த ஊழியர் பணிபுரிந்து வருகின்றார். நேற்று வேலைக்கு வந்த அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வேலை பார்த்து வந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறை மூடப்பட்டது.

கொரோனாவின் காரணத்தால் சென்ற 18ஆம் தேதி முதல் 50% ஊழியர்களைக் கொண்டு தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செயல்பட்டு வருகின்றன.