
திருப்பூர்,மே 12 திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் தொழில்தான், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டாலர்சிட்டி குட்டி ஜப்பான் என்று பலபெயர்களை கொண்ட ஊர். ஆனால் இந்த பத்து ஆண்டுகளில் படி படி யாக கடும் விழ்ச்சியை சந்தித்து வருகிறது. பணம் இழப்பு GST என்று சொல்லி கொண்டே செல்லலாம், பல ஏற்றுமதி (EXPORT) நிறுவனங்கள் கானாமல் போனது இன்று கலத்தில் கை கொடுத்துகொண்டிருப்பது Domestic உள்னாட்டு வர்த்தகம். ஜனவரி முதல் ஜீன் வரை (Summer) கோடை காலம் […]
Continue reading …
சென்னை,மே 12 கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி […]
Continue reading …
புது டெல்லி,மே 12 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Continue reading …
சென்னை,மே 12 வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் […]
Continue reading …
சென்னை,மே 11 விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றவாளிகள் மீது […]
Continue reading …
சென்னை,மே 11 தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 538, செங்கல்பட்டில் 90, திருவள்ளூரில் 97, அரியலூரில் 33 என சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது. பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது வரை 2,54,899 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது […]
Continue reading …
கோவை, மே 11வே மாரீஸ்வரன் கோவை கல்வி நிறுவனங்கள் கட்டணம் கட்ட சொல்லி நிர்பந்தம், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி. ஆர். நடராஜன் எம். பி. கோரிக்கை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்டச் சொல்லி நிர்ப்பந்திப்பதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. உடனடியாக கோவை […]
Continue reading …
திருப்பூர், மே 11 தனது மானம் பெரிதல்ல அடுத்தவர் உயிர்தான் பெரிது என இடர் நேரத்தில் தனது வேட்டியை அவிழ்த்து காண்டூர் கால்வாயில் தத்தளித்த இரண்டு வன பணியாளர்களை காப்பாற்றிய 60 வயது விவசாயி கார்த்திகேயன். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி தெற்கே மலைப்பகுதி அடிவாரத்தில் பிஏபி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்து தத்தளித்து வந்தது. இத்தகவல் வனத்துறைக்கு செல்கிறது, […]
Continue reading …
புது டெல்லி,மே 11 பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …
சென்னை,மே 11 நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஆறாவது அலகில் கொதிகலன் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளர் உயிரிழந்திருக்கிறார். இவரையும் சேர்த்து இதுவரை இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், படுகாயமடைந்த தொழிலாளர்களில் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையம் அம்மேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 210 மெகாவாட் திறன் கொண்ட அதன் ஆறாவது அலகில் கடந்த […]
Continue reading …