
சென்னை,மே 9 தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2.5.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் […]
Continue reading …
புது டெல்லி,மே 09 மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், தெலுங்கானாவின் சுகாதார அமைச்சர் எடிலா ராஜேந்திரன் மற்றும் கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் ஆகியோருடனான உயர்நிலைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் முன்னிலையிலான இக்கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கோவிட்-19 மேலாண்மைக்கான நிலைமைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஆயத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து […]
Continue reading …
சென்னை,மே 8 நாடு முழுவதும் மின்பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் ‘மின்சார திருத்தச் சட்டம் -2020’ க்கான வரைவை சட்டமாக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில், இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களின் கருத்துக்கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. மேலும் இச்சட்டத்திருத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் […]
Continue reading …
சென்னை,மே 8 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய post production பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய (post production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார் […]
Continue reading …
சென்னை,மே 8 ஆவின் வரலாற்றில் இல்லாதவகையில், 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது ஆவின் நிர்வாகம். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா.வள்ளலார் இ.ஆ.ப வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஆவின். இந்த இக்கட்டான நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் […]
Continue reading …
சென்னை,மே 8 கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு. மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதனைத் […]
Continue reading …
சென்னை,மே 8 மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 9550 இடங்களில், வெறும் 371 இடங்கள், அதாவது 3.80% இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5&ஆம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் […]
Continue reading …
கோவை, மே 7வே. மாரீஸ்வரன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய மாபெரும் சக்தியாக இருப்பவர்கள் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்த பொற்கொல்லர்கள். இவர்களின் தொழில்நுட்ப கைவண்ணத்தில் எண்ணற்ற தங்கநகை டிசைன்களை உருவாக்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்பது ஊரறிந்த விஷயமாகும். கொரோனா வைரஸ் தொற்று நோயால் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையில்லாமல் வீட்டில் முடங்கிப் போயிருந்த […]
Continue reading …
சென்னை,மே 7 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் நேற்று புதிய உச்சம் எட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் 324 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 771 பேர் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. சென்னையில் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முதலில் ஒற்றை இலக்கங்களிலும், பின்னர் இரட்டை இலக்கங்களிலும் இருந்த நிலை மாறி, கடந்த வாரத்தில் நூற்றுக்கும் […]
Continue reading …
தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்
Continue reading …