
சென்னை,மே 6 இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த, 33,627 கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 1000 உதவித் தொகை வழங்குவதற்காக ரூபாய் 3,36,27,000/- (மூன்று கோடியே முப்பத்தாறு இலட்சத்து இருபத்திஏழாயிரம் மட்டும்) அரசால் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பூசாரிகளின் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் பெற்றளித்தல் ஆகிய பணிகளை கிராம நிருவாக அலுவலர்கள் மூலமாக மேற்கொண்டு விவரங்களை […]
Continue reading …
கோவை, மே 6 கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஈஷா யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது […]
Continue reading …
சென்னை,மே 6 ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப் பணித்துறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ளஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க முதலமைச்சர் அவர்களால் ‘குடிமராமத்து திட்டம்’ 2017-ல் தொடங்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை […]
Continue reading …
சென்னை,மே 6 நாம் தொடர்ச்சியாக டாக்டர் தணிகாசலம் ஒரு போலி டாக்டர் என்றும், கொரனா விற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார் என்று ஆதாரபூர்வமாக செய்திகளை வெளியிட்டுவந்தோம். அதேபோல் அவர் ஒரு டாக்டர் அல்ல, மனநோயாளி என்ப்தையும் தெரியப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இந்த நிலையில் தான் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் அவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்த […]
Continue reading …
புது டெல்லி,மே 05 கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக தேசிய மாணவர் படை (NCC) ஆற்றியுள்ள பங்கு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 17 NCC இயக்குநரகங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர், இதுபோன்ற மாநாட்டின் மூலம் உரையாடுவது இதுவே முதன் முறையாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜித் குமார் ஆகியோரும் பங்கேற்றனர். […]
Continue reading …
புது டெல்லி,மே 05 ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். நாடெங்கும் அமலில் இருக்கும் கொரோனா வைரஸ், முடக்க நிலையினால் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஓய்வூதியத்தை முன்னதாகவே அளிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 கள அலுவலகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து, இந்த அலுவலகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும், இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு […]
Continue reading …
நாகை, மே 5மூர்த்தி தமிழ்நாட்டில் ஊரடங்கு சட்டத்தில் மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பிரியர்கள் ஒரு குவாட்டர் 300க்கு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வருகின்றனர். அருகில் உள்ள காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வர முயற்சித்தாலும் அந்த அரசாங்கம் கேமிரா மூலம் கண்காணித்து வருவதால் கடையில் உரிமையாளர்களின் உரிமை ரத்தாகி விடும் என்ற பயத்தில் உள்ளார்கள். நாகப்பட்டினம் அருகே பொய்யூர் கிராமத்தில் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன் தன் வீட்டில் எரிசாராயம் காய்ச்சுகின்ற தொழிலை ஆரம்பித்துள்ளார். […]
Continue reading …
சென்னை,மே 4 நாம் தொடர்ந்து போலி சித்த வைத்தியர் தணிகாசலம் பற்றிய செய்தியினை ஆதார பூர்வமாக வெளியிட்டு வருகிறோம். கடந்த இரண்டாம் தேதி கூட நம் இணைய தளத்தில் வெளியிட்டோம். நம் செய்தி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், கோவிட் -19 எனும் கொரனோ வைரஸ் குறித்து வாட்ஸ் […]
Continue reading …
சென்னை,மே 4 கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கிவருகிறது. மத்திய அரசின் ஊரடங்குஉத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் […]
Continue reading …
சென்னை,மே 4 தமிழக முதல்வருக்கு த.மு.மு.க தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம் அனிபா விடுக்கும் வேண்டுகோள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் தமிழக அரசு கவனம் அதிகமாக செலுத்தி அவர்களை கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள், அதை சரியான முறையில் டெல்லியில் இருக்கும் தமிழக பிரதிநிதிகளை வைத்து அவர்களை தமிழகம் கொண்டு […]
Continue reading …