
புது டெல்லி,மே 04 தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது. இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும். இந்த விருதுக்கான நியமனங்கள்/பரிந்துரைகளை வரவேற்று 20 செப்டம்பர், 2019 அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. https://nationalunityawards.mha.gov.in என்னும் […]
Continue reading …
சென்னை,மே 4 தமிழகம், இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் சாலை உட்கட்டமைப்பானது இன்றியமையாததாகும். சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு முகமைகளோடு ஆலோசித்து புதுமையான வழிமுறைகளை மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை – Performance Based Maintenance Contract (PBMC) ஆகும். இதில், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாலைகள் மற்றும் அதில் உள்ள […]
Continue reading …
புது டெல்லி,மே 03 கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் பழங்குடியினருக்கு உதவுவதற்கும், சிறு வன உற்பத்திப் பொருள்களைச் சேகரிக்க இது உச்சபட்ச காலம் என்பதைக் கருத்தில் கொண்டும், அவற்றை விரைந்து கொள்முதல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிறு வன உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன. 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2020-21 நிதியாண்டுக்கான கொள்முதல் இதுவரை ரூ.20.30 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]
Continue reading …
கோவை,மே 3வே.மாரீஸ்வரன் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி, அரசியல் அதிகார அமைப்பு அதிரடி முடிவு . தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் இருந்து எங்களை விடுதலை செய்ய வேண்டும், அத்துடன் எங்கள் தேவேந்திரகுல சமூகத்திலுள்ள உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து எங்கள் சமூக மக்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக எங்கள் தேவேந்திரகுல சமுதாயத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அதன்பிறகு எங்களை புறக்கணித்து விடுகிறார்கள். அதனால் அரசியல் அதிகார அமைப்பும் […]
Continue reading …
சென்னை,மே 3 “ஊரடங்கு தளர்வுகளில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் கொரானாவை எதிர் கொண்டு அதனை வீழ்த்திட மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சுமார் 40நாட்களை கடந்து போன சூழலில் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் மேலும் இரு […]
Continue reading …
திருப்பூர், மே 3 திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த 112 பேர் கோவையிலுள்ள இ. எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 108 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி சென்றுவிட்டனர். மீதமுள்ள நான்கு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரை அடுத்த இடுவாயை சேர்ந்த 50 வயது மற்றும் 24 வயதுள்ள 2 லாரி டிரைவர்கள் கடந்த 23ஆம் தேதி சென்னைக்கு சென்றனர். […]
Continue reading …
சென்னை, மே 3 இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சுற்றுச்சூழலை சீரழித்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தொழில்திட்டங்களுக்கும், […]
Continue reading …
சென்னை, மே 2 நாம் ஏற்கனவே டாக்டர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் தணிகாசலம் ஒரு டுபாக்கூர் டாக்டர் என்பதை ஆதாரபூர்வமாக சொல்லியிருந்தோம். தணிகாசலம் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது காரணம் இதுதான், நான் கொரோனாவை குணப்படுத்துவேன் என சொல்லி சமீபகாலமாக முகநூலில் பேசி அதை தனது கைதடியில் மூலம் யூ டியுபியில் பரப்பி வருகிறார். அவர் ஒரு போலி டாக்டர், அவர் ஒரு மனநோயாளி என்ற விபரம் கூட தெரியாமல் சில நெட்டிசன்கள் […]
Continue reading …
சென்னை, மே 2 மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களிடமிருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும் என்பது உலக வரலாற்றில் அறமற்ற முறையில் அத்துமீற நினைக்கும் அதிகார வர்க்கத்தின் முதல் செயல் திட்டம் ஆகும். ஏற்கனவே நாங்கள் நீட் என்கிற எமனுக்கு பத்துக்கும் மேற்பட்ட அறிவும் செறிவும் நிறைந்த எங்கள் […]
Continue reading …
கடலூர்,மே 02 முக்கனிகளில் முதன்மையானது பலாப்பழம். அளவில் பெரியது மட்டுமல்ல, சுவையிலும் அருமையானது. நமது வரலாற்றில் பலாப்பழத்திற்கு எப்போதும் தனித்த இடம் இருந்தே வந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் பலாமரமும் பலாப்பழமும் பல பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு எனப் பல சங்கத்தொகைப் பாடல்களில் பலாப்பழம் இடம் பெற்றுள்ளது. “சிறுகோட்டுப் பெரும்பழம்” என்று கபிலர் குறுந்தொகையில் வியந்து குறிப்பிடுகிறார். சிறு காம்பில் மிகப்பெரிய பழம் முறியாமல் தொங்கிக் கொண்டிருப்பது […]
Continue reading …