
சென்னை, மே 2 இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் […]
Continue reading …
சென்னை, மே 2 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள நிலையில், நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களை நோய்த் தாக்காமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் […]
Continue reading …
சென்னை, மே 1 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செயல்படுத்தும் பணியில் காவல்துறையினருடன் சேர்த்து ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள் எத்தகைய பணிகளை செய்கிறார்களோ, அதே பணிகளை செய்யும்படி ஊர்க்காவல் படையினரும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த பணியின் […]
Continue reading …
கோவை,மே 1 ஈஷாவின் கொரோனா நிவராணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கொரோனா பிரச்சினையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று உணவும், நிலவேம்பு கசாயமும் […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 30 கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ் நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு முதலமைச்சர் உத்தரவு. தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் […]
Continue reading …
சென்னை, 30 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே தின வாழ்த்துச் செய்தி : உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியமில்லாமல், காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 30 நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 30 செங்குருதியை வியர்வையாய் சிந்தி உழைத்த தொழிலாளர் வர்க்கம் இன்று கொரானாவெனும் கொள்ளை நோயினால் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டு, கட்டுண்டு கிடக்கிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை. எஜமானர்களை ஏணியாக இருந்து உயர்த்தி விட்டு, ஓய்வென்பதையே அறியா உழைக்கும் கரங்கள் இன்று வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வைக்கப்பட்டுள்ளது வேதனை.உழைப்பதினால் சொற்ப வருமானமே கிடைத்தாலும் அதில் அளப்பரியா சந்தோசம் கண்டு, மகிழ்ச்சி கடலில் நீந்தி வந்த தொழிலாளர்கள் […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 30 ‘உழைப்புதான் இந்த உலகை வாழ்விக்கிற சக்தி’ என்பதை நிரூபிக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு நினைவு கூர்வோம். உலகம் இதுவரை சந்தித்திராத சூழ்நிலையில் கூட எத்தனையோ பேரின் உழைப்புதான் மனித குலத்தைக் காப்பாற்றி […]
Continue reading …
உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து செய்தி. உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் […]
Continue reading …