Home » Archives by category » தமிழகம் (Page 347)

கைதிகளுக்கு தனி சிறை – சிறைத் துறை தகவல் !

Comments Off on கைதிகளுக்கு தனி சிறை – சிறைத் துறை தகவல் !
கைதிகளுக்கு தனி சிறை – சிறைத் துறை தகவல் !

தமிழக முழுவதும் உள்ள சிறைகளில் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ள கைதிகள், புதிய கைதிகளிடமிருந்து கொரோனா தொற்று பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியில், தமிழக சிறைத் துறை 37 நகரங்கள் / மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகள், துணை சிறைகள் மற்றும் போர்ஸ்டல் பள்ளிகளுக்கு புதியவர்களுக்கு தனி இடமளிக்க அறிவித்துள்ளது. காவல்துறை இயக்குனர் ( சிறைச்சாலைகள் ) சுனில் குமார் சிங் கூறுகையில், சிறைக்கு வரும் புதியவரிடமிருந்தும் தற்போதுள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

Continue reading …

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது – மருத்துவர் இராமதாசு !

Comments Off on மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது – மருத்துவர் இராமதாசு !
மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது –  மருத்துவர் இராமதாசு !

கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. சில வங்கிகள் தாங்களாகவே கடன் தவணையை ஒத்திவைத்துள்ளன. இன்னும் சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் […]

Continue reading …

தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !

Comments Off on தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !
தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !

சென்னை: இன்று முதல் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 88 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். அவசர தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் பல குடும்ப அட்டைகார்கள் கடைக்கு வந்தால், கூட்ட நெரிசல் ஏற்படும் எனப்தால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் […]

Continue reading …

தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு !

Comments Off on தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு !
தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு !

தேனி : தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வெளியே வந்தால் […]

Continue reading …

ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!

Comments Off on ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!
ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!

வே. மாரீஸ்வரன் கோவை : கடந்த மார்ச் 21 முதல் 24 வரை டெல்லியில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு நடந்தது. இதில், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, பகுதிகளைச் சேர்ந்த சுமார் 82 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு திரும்பி வந்தனர்.டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய கருத்தரங்கில் பங்கேற்று விட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தாய்லாந்து சுற்றுலா பயணிகள் மூலமே பாதிப்பு […]

Continue reading …

கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!

Comments Off on கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!
கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!

சேலம் சிவா சேலம் : சேலம் மாவட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமேயில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் அநியாய கந்து வட்டி வசூலும். இது தொடர்பாக போலீஸாருக்கு பெட்டிஷன் அனுப்பினாலோ, தகவல் சொன்னாலோ நடவடிக்கை என்ற பெயரில் கமிஷனை உயர்த்திக் கொண்டு, தகவல் சொன்னவரையே மிரட்டும் அவல நிலைக்கு ஆத்தூர் உள்ளது என பொதுநல ஆர்வலர்களின் பெரும் புலம்பலாகவே உள்ளது. ஆன்மிக […]

Continue reading …

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் !

Comments Off on கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் !
கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் !

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் (COVID – 19) தடுப்பு நடவடிக்கையாக 28.03.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று நோய் (COVID – 19) உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், இராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி […]

Continue reading …

தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?

Comments Off on தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?
தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?

வால்மீகி ராமநாதபுரம் : மணல் அள்ள நீதிமன்றங்கள் எத்தனை தடை விதித்தாலும் எங்களுக்கு கவலையே இல்லை. நாங்கள் எங்கள் திருட்டு தொழிலை செய்து கொண்டு தான் இருப்போம் என்பதுபோல், தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தான் வருகிறார்கள் மணல் கொள்ளையர்கள். மணல் கொள்ளைக்கு கடுமையான சட்டங்கள் இல்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. நாம் சில மாவட்டங்களில் இது சம்பந்தமாக விசாரணையில் இறங்கினோம். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் மணல் கொள்ளை […]

Continue reading …

கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை – மருத்துவர் இராமதாசு !

Comments Off on கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை – மருத்துவர் இராமதாசு !
கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை – மருத்துவர் இராமதாசு !

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வருவாய் இழந்து வாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளன.  பெற்றோரின் நிலைமையை புரிந்து கொள்ளாத தனியார் பள்ளிகள் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து வகையான […]

Continue reading …

அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !

Comments Off on அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !
அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !

தொழிலாளர் ஆணையராக இதுவரை எத்தனையோ ஆணையர்களை தொழிலாளர் துறை கண்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள ஆணையர் டாக்டர் ஆர்.நந்தகோபால், ஆணையராக பொறுப்பேற்ற பின்னர், பெண் அதிகாரிகள் மிகவும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆணையர் நந்தகோபால் தனக்கு உள்ள 17 பி மற்றும் 17 ஏ என பல அதிகாரங்களை பயன்படுத்தி, பணி இடைநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி, தனக்கு கீழ்ப்படியாத பெண்களை, டம்மியான பதவிக்கு மாற்றி, தனது தேவைகளை பூர்த்தி […]

Continue reading …