Home » Archives by category » தமிழகம் (Page 44)

எங்கெல்லாம் மழை பெய்யும்?

Comments Off on எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்தது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Continue reading …

குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

Comments Off on குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் தமிழகத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழே சென்றுள்ளது.அணையின் நீர்த்தேக்க பகுதியில் புராதன சின்னங்கள் வெளியே தரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் மிக வேகமாக நீரின் அளவு குறைந்து வருவதாக கவலை தரும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் பெங்களூரில் ஏற்பட்ட தண்ணீர் கஷ்டம் தமிழகத்திற்கு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் […]

Continue reading …

விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு!

Comments Off on விவிபேடுகளின் நம்பகத்தன்மை குறித்த வழக்கு!

தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் விசாரணை […]

Continue reading …

நிர்மலாதேவி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி!

Comments Off on நிர்மலாதேவி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி!

இன்று நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்ற நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி மீது கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நிர்மலா தேவி […]

Continue reading …

பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல்.

Comments Off on பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல்.

பாஜகவில் பூத் ஏஜெண்ட் பணத்தை ஏமாற்றிவிட்டதாக போஸ்ட்டர் ஒட்டி உட்கட்சி மோதல். விருதுநகர் – திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக தலைமை ஒதுங்கியிருந்த 40 லட்சம் ரூபாயை கொடுக்காமல், பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றி விட்டதாக, குற்றம் சாட்டி திருமங்கலம் நகர் முழுவதும்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Continue reading …

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

Comments Off on மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நிர்மலா தேவி ஆஜராகாத நிலையில் வழக்கின் தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி.

Continue reading …

ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

Comments Off on ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

மதுரையில் திடீரென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை […]

Continue reading …

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Comments Off on தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம், “இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக […]

Continue reading …

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை!

ஸ்மோக் பிஸ்கட்டுகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் உள்ள ஸ்மோக் பிஸ்கட்டுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது. திரவ நைட்ரஜனை உணவுப் பொருளில் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் திடீரென உடல்நல கோளாறால் கதறிய வீடியோ வைரலானதை அடுத்து […]

Continue reading …

திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

Comments Off on திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனர் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சியில் அரசு பேருந்தில் நடத்துனர் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென பேருந்து வளைவில் திரும்பியது. அப்போது நடத்துனர் இருக்கையின் போல்ட்டுகள் கழன்றதால் அவர் இருக்கையோடு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு நடத்துனரை சென்று பார்த்த போது அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாமல் நடத்துனரின் இருக்கை போல்ட்டுகள் துருப்பிடித்து இருந்ததால் அரசு […]

Continue reading …