Home » Archives by category » தமிழகம் (Page 45)

மக்களே உஷார்! தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

Comments Off on மக்களே உஷார்! தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வருகிற 29ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். […]

Continue reading …

பழனி கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை!

Comments Off on பழனி கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை!

அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் பழனி கோயிலுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பழனி மலை கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பழனி கோவிலுக்கு செல்லும் முதியவர்கள், குழந்தைகள் எளிதாக பயணம் வருகின்றனர். அமெரிக்கவில் பணிபுரியும் முருக பக்தர் அகிலன் ரவிச்சந்திரன் தனது சார்பில் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனம் கொடுத்துள்ளார். […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்?

Comments Off on காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்?

நடிகர் மன்சூர் அலிகான் ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் […]

Continue reading …

செல்போனால் விபரீதம்; தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!

Comments Off on செல்போனால் விபரீதம்; தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 35) மனைவி சவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் செல்போனில், அடிக்கடி விளையாடுவது வழக்கம். இதனை சவுந்தர்யா கண்டித்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் முத்துராமன் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சவுந்தரி கணவரை திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்துராமன், சவுந்தரியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், […]

Continue reading …

தகிக்க போகும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Comments Off on தகிக்க போகும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பநிலை பல இடங்களில் உயரும் என தெரிவித்துள்ளது. இந்த வருடம் தமிழ்நாட்டில் இன்னும் அக்கினி வெயிலே தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. இம்மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று […]

Continue reading …

அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

Comments Off on அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் இன்று ஏப்-19ம் தேதி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, […]

Continue reading …

தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Comments Off on தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெற்கு ரயில்வே இன்று மக்களவை தேர்தலுக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இன்றும் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இன்று ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் கூட்டம் இன்று வரை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை சென்னை திருச்சி முன்பதிவில்லா சிறப்பு […]

Continue reading …

வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

Comments Off on வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

வேங்கை வயல் உள்பட இரண்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட அந்த கிராம மக்கள் வர முடியாது என்று கூறியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கோபம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்த கோபத்தை அப்பகுதி மக்கள் தேர்தலில் காட்டி வருவதாக தெரிகிறது. வேங்கை வயல் மற்றும் இறையூர் ஆகிய […]

Continue reading …

ஈபிஎஸ் எடுத்த தப்புக்கணக்கு அவருக்கு புரியும்; சசிகலா!

Comments Off on ஈபிஎஸ் எடுத்த தப்புக்கணக்கு அவருக்கு புரியும்; சசிகலா!

சசிகலா மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி போட்ட தப்புக்கணக்கு அவருக்கு புரியும் என்று பேட்டியளித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள். சசிகலா தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம், “மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் போட்ட தப்புக்கணக்கு அவர்களுக்கே புரியும்” எடப்பாடி பழனிச்சாமியை […]

Continue reading …

லண்டன் நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி!

Comments Off on லண்டன் நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி!

இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக லண்டனிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் லண்டனில் வசித்து வந்தவர் தனது வாக்கினை பதிவு செய்ய […]

Continue reading …